fbpx
Homeபிற செய்திகள்புதிய மோட்டார் சைக்கிள்கள் அறிமுகம்

புதிய மோட்டார் சைக்கிள்கள் அறிமுகம்

இந்தியாவின் சூப்பர்பைக் துறையின் முன்னணி உற்பத்தியாளரான, அதிஷ்வர் ஆட்டோ ரைடு இந்தியா பிரைவேட் லிமிடெட் (AARI), சமீபத்தில் இரண்டு நியோ-ரெட்ரோ மோட்டார் சைக்கிள்களை நுழைவு-நிலை பிரீமியம் பிரிவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

98-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருக்கும் ஹங்கேரிய மார்க்வி KEEWAY இலிருந்து Uber Cool SR 250 மற்றும் Unpretentious SR 125 ஆகியவை இதில் அடங்கும்.

வாடிக்கையாளர்கள் நவீன கால செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மையில் சமரசம் செய்யாமல் 80 மற்றும் 90-களின் நினைவுகளை அனுபவிக்க அனுமதிக்கிறது. Keeway SR 125 ஏற்கனவே விற்பனையில் உள்ள நிலையில் Keeway SR 250-ன் டெலிவரிகள் ஜூன் 17 முதல் தொடங்கியது.

அதிஷ்வர் ஆட்டோ ரைடு இந்தியா 2023ம் ஆண்டின் இறுதிக்குள் இரண்டு நியோ-ரெட்ரோ ரைடுகளை உள்ளூர் மயமாக்கத் திட்டமிட்டுள்ளது. உள்ளூர்மயமாக்கலை நோக்கி நகர்வது SR 250 மற்றும் SR 125 க்கு கிடைத்த வரவேற்பின் விளைவாகும்.

Keeway SR 250-ன் முதல் ஐநூறு டெலிவரிகளுக்கு அதிர்ஷ்டக் குலுக்கலை அறிவித்துள்ளது, இதில் ஐந்து அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர்களுக்கு எக்ஸ்-ஷோரூம் விலையில் 100% கேஷ்பேக் கிடைக்கும்.

நிறுவனம் ‘My SR My Way’’ இயங்குதளத்தை அறிமுகப்படுத்த உள் ளது, நிறுவனம் SR 250 மற்றும்SR 125-க்கு முன்பக்க வைசர், பேஸ் பிளேட், பேக்ரெஸ்ட், லெக் கார்டு, சேரி கார்டு, சீட் கவர், ஃப்யூவல் டேங்க் கவர் மற்றும் ஹேண்ட்ரெயில்களை உள்ளடக்கிய பலவிதமான ஆக்சஸெரீஸ்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

தினசரி போக்குவரத்தை மட்டும் கருத்தில் கொள்ளாமல், நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறமாக இருந்தாலும், மக்களின் பாதுகாப்பையும் வசதியையும் உறுதிப்படுத்துகிறது.

படிக்க வேண்டும்

spot_img