இந்தியாவின் முன்னணி சோப்பு பிராண்டுகளில் ஒன்றான சிந்தால், கடந்த ஏழு சதாப்தங்களாக தமிழ் நாட்டில் உள்ள நுகர்வோரின் வாழ்வில் ஓர் அங் கமாக இருந்து வருகிறது.
சமூக மாற்றங்களை அங்கீகரிப்பதன் மூலமும், நுகர்வோரின் மாறிவரும் கோரிக்கைகளை பிரதிபலிப்பதன் மூலமும், இந்த பிராண்ட் தமிழ்நாட்டில் எப்போதும் தொடர்புடையதாக இருந்து வருகிறது.
அதே நேரத்தில் அவர்களுக்கு நம்பகமான சரும ஆரோக்கியத்தை வழங்குகிறது. சிந்தால் இன் புதிய விளம்பரப் பிரச்சாரமான, ‘கொதிக்கும் வெயிலில் தான் கனவுகள்ஜொலிக்கும்‘ என்ற தலைப்பு இந்தப் பயணத்தை முன்னோக்கி கொண்டு செல்கிறது.
இன்று தமிழ்நாட்டுப் பெண்களின் அபிலாஷைகள் பரிணமித்துள்ளன என்ற நுண்ணறிவை மையமாக வைத்து இந்த ஃபிலிம் உருவாக்கப்பட்டுள்ளது.
கோத்ரெஜ் கன்சூமர் ப்ராடக்ட்ஸ் லிமிடெட்
இந்த பிரச்சாரத்தைப் பற்றி பேசிய கோத்ரெஜ் கன்சூமர் ப்ராடக்ட்ஸ் லிமிடெட்(GCPL) இன் இந்தியாவின் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி அஷ்வின் மூர்த்தி, “பிரசாரத்தில் பணிபுரியும் போது, சிந்தால் போன்ற அந்தஸ்துள்ள பிராண்டுகள் நுகர் வோரின் தற்போதைய அபிலாஷைகளை அதன் கதையில் நுண்ணறிவுடன் பிரதிபலிக்க வேண்டும் என்பதை உணர்ந்தோம்.
அடுத்த தலைமுறைக்கு வலுவான தேசத்தைக் கட்டியெழுப்புவதில் இன்னும் பெரிய பங்கை வகிக்க உதவும் சவாலான தொழில்களை விரும்புவதில் இன்றைய பெண்களுக்கு அதிக நம்பிக்கை உள்ளது” என்றார்.
கிரியேட்டிவ்லேண்ட் ஆசியாவின் இணை நிறுவனரும், கிரியேட்டிவ் துணைத் தலைவருமான அனு ஜோசப் கூறுகையில், இந்த யோசனையின் மூலம், மருத்துவர் பரிந்துரைக்கும் சோப்பு மற்றும் சரும சுகாதார நிபுணராக சிந்தால் தனது பாரம்பரியத்தை தொடருகிறது.
‘‘கொதிக்கும் வெயிலில் தான் கனவுகள்ஜொலிக்கும்‘’ என்ற மைய பிராண்ட் சிந்தனையானது, பெண்கள் தங்கள் வழியில் வரக்கூடிய எந்த தடைகளையும் பொருட்படுத்தாமல் தங்கள் கனவுகளைப்பின்பற்ற ஊக்குவிக்க முயல்கிறது என்றார்.



