கோவையின் முன்னணி பல்துறை நிபுணத்துவ மருத்துவ நிறுவனமான ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை நரம்பியல் துறையில் மேம்பட்ட ஸ்ட்ரோக் மைய கருத்தரங்கை ஹோட்டல் ரெசிடென்சி டவர்ஸில் எஸ்.ஆர்.எச் ஸ்ட்ரோக் கருத்தரங்கம் நடத்தியது.
இந்த கருத்தரங்கை ஸ்ட்ரோக் கண்டறிதல், சிகிச்சை, அவசர பராமரிப்பு மற்றும் நீண்டகால மேலாண்மை ஆகிய துறைகளில் சமீபத்திய முன்னேற்றங்களைப் பற்றிய ஆழமான பார்வை யையும் நடைமுறை வழிகாட்டு தல்களையும் வழங்கியது.
இந்த நிகழ்ச்சியில் நரம்பியல் நிபுணர்கள், ஸ்ட்ரோக் வல்லுநர்கள், இன்டர்வென்ஷனல் நிபுணர்கள் மற்றும் மூத்த மருத்துவர்கள் உள்ளிட்ட பல துறை நிபுணர்கள் பங்கேற்றனர். காலை 9.30 மணிக்கு டாக்டர் என். வேதநாயகம், “அக்கியூட் இஸ்கீமிக் ஸ்ட்ரோக்-இல் த்ராம்போலைசிஸ்” என்ற தலைப்பில் உரையாற்றி நிகழ்ச்சியைத் தொடங்கினார்.
தொடர்ந்து “இஸ்கீமிக் ஸ்ட்ரோக்கின் அரிய காரணங்கள்” மற்றும் “இஸ்கீமிக் ஸ்ட்ரோக்கில் என்டோவாஸ்குலர் சிகிச்சை” ஆகிய தலைப்புகளில் டாக்டர் கே. அசோகன் மற்றும் டாக்டர் கே. அருணா தேவி விளக்கவுரைகள் வழங்கினர்.
துவக்க விழா காலை நடைபெற்றது. இதில் மருத்துவமனையின் தலைமைச் செயற்குழுவினர் கலந்து கொண்டனர்.
இதில் சுந்தர் (நிர்வாக அறங்காவலர்), நரேந்திரன் (துணை நிர்வாக அறங்காவலர்), ராம்குமார் (தலைமை செயல் அதிகாரி), மகேஷ்குமார் (தலைமை நிர்வாக அதிகாரி), டாக்டர் எஸ். ராஜகோபால் (மருத்துவ இயக்குனர்) மற்றும் டாக்டர் எஸ். அழகப்பன் (மருத்துவ கண்காணிப்பாளர்) ஆகியோர் பங்கேற்றனர்.
துவக்க விழாவுக்கு பிறகு நடைபெற்ற அமர்வுகளில் “ஸ்ட்ரோக் மேலாண்மையில் செயற்கை நுண்ணறிவு” என்ற தலைப்பில் டாக்டர் ஆர். லக்ஷ்மி நரசிம்மன், மற்றும் டாக்டர் ஆர். மணிவாசகன் உரையாற்றினர். பிற்பகல் நிகழ்வுகளில் “இரண்டாம் நிலை ஸ்ட்ரோக் தடுப்பில் ஆன்டிபிளேட்லெட் சிகிச்சை”, “உயர் இரத்த அழுத்தம் மற்றும் அபாய காரணி மேலாண்மை”, மற்றும் “அக்கியூட் ஸ்ட்ரோக்கில் அறுவை சிகிச்சை தலையீடு” போன்ற தலைப்புகளில் டாக்டர் பிரகாஷ், டாக்டர் கே. கே.பிரசாத், மற்றும் டாக்டர் ஆர். முரளி ஆகியோர் உரையாற்றினர்.
ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை, இந்தியாவின் குவாலிட்டி & அக்ரெடிடேஷன் இன்ஸ்டிட்டியூட் (QAI) மூலம் மேம்பட்ட ஸ்ட்ரோக் மையமாக அங்கீகரிக் கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இது மருத்துவமனையின் உயர்ந்த தரச்சான்றுகளையும், தொழில் நுட்ப முன்னேற் றத்தையும், நோயாளி மையப்படுத் தப்பட்ட சேவை யையும் உறுதிசெய்கிறது.இறுதியில் டாக்டர் கே.அசோகன் நன்றி கூறினார்.



