பள்ளிபாளையம் நகராட்சி வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆணை யாளரிடம் அதிமுக நகர செயலாளரும் முன்னாள் நகர மன்றத் தலைவருமான பி.எஸ்.வெள்ளிங்கிரி நேற்று மனு அளித்தார்.
அந்த மனுவில் தெரிவித்து இருப்பதாவது:
2012 ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் தங்கமணி தனது குமாரபாளையம் சட்ட மன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் ரூ 65 லட்சம் ஓதுக்கி பெரிய 2 பயணியர் நிழற்கூடம் பள்ளிபாளையத்தில் அமைக்கப்பட்டது. தற்பொழுது புதிய பாலம் அமைக்கப்பட்டு வருவதால் அந்த 2 நிழற்கூடங்களும் அகற்றப்பட்டுள்ளது. மேற்கண்ட 2 நிழற் கூட ங்களை பொதுமக்கள் நலன் கருதி தகுந்த இட த்தில் அதை அமைத்து தர வேண்டும்.
2014 ஆம் ஆண்டு ஆவாரங்காடு, புதன்சந்தைபேட்டை, ஜீவாசெட் பகுதிகளில் சுத்திரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நிலையஙகள் அமைக்கப்பட்டு நகராட்சி, அபெக்ஸ் அசோசியேட்ஸ் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வசதியை வார்டு எண்-16 காந்திபுரம், வார்டு எண் 20 பெரியார் நகர் பகுதிகளிலும் அமைக்க வேண்டும்.
அம்ரூத் திட்டத்தின் கீழ் குடிநீர் அபிவிருத்தி திட்டத்தை விரைந்து முடித்து பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்க வேண்டும். வார்டு எண் 8 மற்றும் 9 ஆண்டிகாடு பகுதியில் ஜீவாசெட் முதல் தங்கமுத்து பட்டறை வரை சாலை அமைத்து கொடுக்க வேண்டும்.
1, 4 மற்றும் 19 ஆகிய வார்டுகளில், காவேரி நதி கரையில் உள்ள படித்துறைகளில் ஆகாயத் தாமரையை நீக்க வேண்டும். நகராட்சியில் நடை பெற்று வரும் வளர்ச்சி, சாலை, குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக் கப்பட்டு இருந்தது.
மனு கொடுத்தபோது, முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் சுப்பரமணி, நகராட்சி கவுன்சிலர்கள் சரவணன். செந்தில், சுரேஷ், சுஜாதா மாரிமுத்து, சம்பூரணம், சுசிலா ராஜா. நகர துணைச்செயலாளர் ஜெய்கணேஷ், நகர பொருளாளர் சிவகுமார், மாவட்ட பிரதிநிதி ஆறு முகம், தகவல் தொழில்நுட்ப பிரிவு சரவணன், சுரேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.