கேபிஆர் பொறியியல் கல்லூரியின் தலைவர் டாக்டர் கே பி ராமசாமி தொலைநோக்கு பார்வை மற்றும் வழிகாட்டுதலின் படியும், ஜெம் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் டாக்டர் டி.ஆர். சி.பழனிவேலு ஒத்துழைப் புடன் கேபி ஆர் கல்லூரியின் பயோமெடிக்கல் இன்ஜினியரிங் துறை, கோயம்புத்தூர் ஜெம் மருத்துவமனையுடன் தனது புரிந்துணர்வு ஒப்பந்தத்தை புதுப்பித்துள்ளது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் புதுப்பிக்கும் நிகழ்ச்சியில் கல்லூரியின் உயிர் மருத்துவ பொறியியல் துறை தலைவர் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
இது கடந்த மூன்று ஆண்டுகளில், மாணவர்களுக்கு பயிற்சி மற்றும் நிபுணத்துவ விரிவுரைகள் மூலம் நடைமுறை அனுபவத்தைப் பெற உதவியது. அவர்களின் கல்வி மற்றும் தொழில்முறை வளர்ச்சியை மேம்படுத்துகிறது. கூடுதலாக, ஒத்துழைப்பு ஆசிரியர்களின் ஆராய்ச்சி மற்றும் தொழில்முறை வளர்ச்சியில் பெரிதும் உதவியது. மேலும் இது இலவச மருத்துவ முகாம்களை ஏற்பாடு செய்து, தேவைப்படுப வர்களுக்கு அத்தியாவசிய சுகாதார சேவைகளை இரு நிறுவனங்களும் இணைந்து வழங்க வழி வகுத்தது.
இந்த புதுப்பிக்கப்பட்ட ஒப்பந்தம் கூட்டு முயற்சிகள் மூலம் கல்வி மற்றும் சமூக விளைவுகளை மேம்படுத்துவதற்கான தொடர்ச்சியான முயற் சிகளைத் தக்கவைக்கும்.