இந்திய அணுவியல் மருத்துவ கழகத்தின் 56வது தேசிய அள விலான கருத்தரங்கு கே.எம்.சி. ஹெச். மருத்துவமனையின் அணுவியல் மருத்துவத் துறை சார்பில் டிசம்பர் 5-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை கோவை அவிநாசி ரோட்டில் உள்ள லீ மெரிடியன் ஹோட்டலில் நடைபெற்றது.
நான்கு நாட்கள் நடைபெற்ற இக்கருத்தரங் கில் இந்தியா, தென்னா பிரிக்கா, ரஷ்யா, அமெ ரிக்கா, இங்கிலாந்து, பெல் ஜியம் உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் இருந்து 550-க்கும் மேற்பட்ட நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் கே.எம்.சி.ஹெச். துணை தலைவர் டாக்டர் தவமணி தேவி பழனிசாமி கலந்து கொண்டு பெண் மருத்துவர்கள் எதிர்கொள் ளும் உடல்நலம் தொடர் பான பிரச்னைகள் பற்றி பேசினார்.
முன்னதாக இந்திய அணுவியல் சங்கத்தின் தலைவர் டாக்டர் பிரபு வரவேற்புரை வழங்கினார். கே.எம்.சி.ஹெச். தலைவர் டாக்டர் நல்லா ஜி பழ னிசாமி கேஎம்சிஹெச் அணுவியல் மருத்துவத் துறை ஆற்றிவரும் பங் களிப்புகள் குறித்து எடுத்துரைத்தார்.
சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பேராசிரியர் ரூடி டிரக்ஸ் ஐரோப் பிய அணுவியல் மருத்துவ சங்கம் பற்றி விளக்கினார். டாக்டர் கமலேஸ்வரன், டாக்டர் ராம்குமார் மற்றும் ராதாகிருஷ்ணன், கே.எம்.சி.ஹெச். அணுவியல் மருத்துவ துறை இணைந்து இக்கருத்தரங்கு வெற்றிகரமாக நடைபெறத் தேவையான ஏற்பாடுகள் செய்திருந்தனர்.