fbpx
Homeபிற செய்திகள்அவினாசிலிங்கம் கல்லூரியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

அவினாசிலிங்கம் கல்லூரியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

அவினாசிலிங்கம் மகளிர் மனையியல் மற்றும் உயர்கல்வி நிறுவனத்தில், கிறிஸ்து மஸ் கொண் டாட்டம் நடைபெற்றது. மத நல்லிணக்கத்தை முன் வைத்த ராமகிருஷ்ண பரமஹம்சர் மற்றும் சுவாமி விவேகானந்தர் ஆகியோரின் இலட்சியங்களை பின்பற்றி செயல் படும் நிறுவனத்தில் ஆண்டு தோறும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் நடை பெறுகிறது.

அனைத்து வகுப்புகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் நேட்டிவிட்டி காட்சியை தத்ரூபமாக சித்தரிப்பது ஓர் சிறந்த நிகழ்வாகும்.
இந்நிகழ்ச்சியில் துணை வேந்தர் டாக்டர்.வி.பாரதி ஹரிசங்கர், பதிவாளர் டாக்டர் ஹெச்.இந்து மற்றும் நிறுவனத்தின் பல்வேறு பள்ளிகளின் டீன்கள் மற்றும் இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.

கோயம்புத்தூர் ராவெல் மாகாணம், நிர்மலா கல்லூரியின் துணை முதல்வர் (ஓய்வு) முனைவர். சர்.அருள் சீலி சிறப்புரையாற்றினார். முனைவர். சீலி, ஒற்றுமை யின் முக்கியத்துவத்தையும், இணையத்தில் ஆதிக்கம் செலுத்தாது, மனித இணைப்பில் கவனம் செலுத்தும் வாழ்க்கையை வாழ்வதையும் வலியுறுத்தினார்.

பதிவாளர் முனை வர் எச்.இந்து கலந்து கொண்டு, கிறிஸ்துமஸ்ஸின் முக்கியத்துவம் குறித் துப் பேசுகையில், “அன்பு, வாழ்க்கை, மகிழ்ச்சி ஆகியவற்றின் கொண்டாட் டமே கிறிஸ்துமஸின் செய்தி” என்றார். தொடர்ந்து, கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து இனிப்பு வழங்கி கொண் டாடப்பட்டது.

உணவு அறிவியல் மற்றும் ஊட்டச்சத்து துறையின் பேராசிரியை முனைவர்.எம்.சில்வியா சுபப்பிரியா வரவேற்றார். ஆங்கிலத்துறை பேராசிரியர் முனைவர் எஸ்.கலா மணி நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img