நாடாளும் மக்கள் கட்சியின் 6ம் ஆண்டு துவக்க விழா மற்றும் மாநில 11வது பொதுக்குழு கூட்டம் தேனி அருகில் உள்ள வீரபாண்டியில் தனியார் திருமண மண்டபத்தில் நிறுவனத்தலைவர் ஜெ.அக்னி செல்வராசு தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், தமிழ்நாடு முழுவதும் ஏராளமான சமூக ஆர்வலர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். சமூக ஆர்வலருக்கென்று பாதுகாப்பு தனி சட்டம் உருவாக்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் பஞ்சமி நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது எஸ்சி, எஸ்டி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலங்களை மீட்க வேண்டும்.
தமிழ்நாடு முழு வதும் மூன்று சதவீதம் பழங்குடி மக்கள் எஸ்டி சான்றிதழ் இல்லாமல் வாழ்ந்து வருகிறார்கள். எஸ்டி சான்றிதழ் தமிழ் நாடு அரசு வழங்க வேண்டும். பனம் பால் தென்னம் பால் (பனங்கள்ளு தென் னங்கள்ளு) இறக்க தடை உள்ளது. தடையை நீக்கி இறக்க அனுமதிதர வேண்டும். கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகள் கொண்டு வந்து விளைநி லங்களில் கொட்டு வதால் நிலத்தடி நீர் மற்றும் விளை நிலங்கள் பாதிக்கப்படு வதால் அதை தடுத்து நிறுத்தி சட்டப்படி நட வடிக்கை எடுக்க வேண் டும். சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் உள்ள தொழிற்சாலைகளை மூட வேண்டும். இவ்வாறு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து ஜெ.அக்னி செல்வராசு பேசியதாவது:
.மேலும் நாடாளும் மக்கள் கட்சி தேசத்தின் வளர்ச்சிக்காக பாடுப டும் எந்தக் கட்சிகளாக இருந்தாலும் அவருடன் கூட்டணிக்கு தயார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் 13 இடங்களில் போட்டியிட்டோம். இந்திய தேர்தல் ஆணையம் ஆட்டோ சின்னம் ஒதுக்கீடு செய்திருந்தது. வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் தேசத்துக்காக பாடுபடும் கட்சிகள் கூட்டணிக்கு அழைத்தால் இணைந்து தேர்தலை சந்திப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.



