ஈரோடு நந்தா பொறியியல் கல்லூரியில் மத்திய அரசு கல்வி அமைச்சத்தின் வழிக்காட்டுதல்படி ஈரோடு பிராந்தியத்திற்கான “சுவயம்-என்.பி.டி.ஈ.எல்” ஆன்லைன் படிப்பிற்கான மையம் செயல்பட்டு வருகிறது.
இம்மையத்தின் மூலம் கடந்த ஜனவரி- ஏப்ரலில் 600 மேற்பட்ட மாணவர்களும், பேராசிரியர்களும் ஐ.ஐ.டிகள் மூலம் நடத்தப்படும் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தனர்.
இச் சாதனைக்கு கல்வி அமைச்சகம் நந்தா பொறியியல் கல்லூரிக்கு “ஏ” தரச்சான்றிதழினை சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில் வழங்கியது.
இதற்காக கல்லூரி அறக்கட்டளை தலைவர் வி சண்முகன், செயலர்கள் எஸ். நந்தகுமார் பிரதீப், எஸ். திருமூர்த்தி, கல்லூரியின் முதல்வர் யு.எஸ். ரகுபதி, மையத்தின் ஒருங்கிணைப்பாளர் ஈ.கே. மோகன்ராஜை மற்றும் பேராசிரியர்களை பாராட்டினர்.