நாமக்கல் மாநகராட் சிக்கு உட்பட்ட, திருச்சி ரோடு பொன் விழா நகரில், ரூ.49 லட்சம் மதிப்பீட்டில் ரோடு மேம்பாட்டு பணிகள் துவக்க விழா நடை பெற்றது. நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் எம்எல்ஏ தலைமை வகித்தார். மாநகர மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி ஆகியோர் முன் னிலை வகித்தனர்.
நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டு றவு வங்கி சேர்மன் கே.ஆர்.என். இராஜேஸ் குமார் எம்.பி., ரோடு அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
பின்னர் அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
கடந்த 2022ம் ஆண்டு நாமக்கல் சேலம் ரோட்டில் இருந்து சேந்தமங்கலம் ரோடு, துறையூர் ரோடு, திருச்சி ரோடு, மோகனூர் ரோடு வழியாக மதுரை பைபாஸ் ரோட்டில் இணைக்கும் சுமார் 20 கி.மீ. தூரம் அவுட்டர் ரிங் ரோடு அமைக்க உத்தரவிட்டார். இதன் மொத்த மதிப்பு சுமார் ரூ.411 கோடி ஆகும்-
முதல் கட்டமாக சேலம் மெயின் ரோட் டில் இருந்து புதிய பஸ் ஸ்டாண்ட் வரை பணிகள் நிறைவு பெற்று போக்குவரத்து நடை பெறுகிறது. 2ம் கட்டமாக பஸ் ஸ்டாண்டில் இருந்து வேட்டாம்பாடி வரை ரோடு பணிகள் முடிவ டையும் நிலையில் உள் ளது. இந்த நிலையில் 4ம் கட்டமாக திருச்சி ரோட் டில் இருந்து மோகனூர் ரோடு வரையும், 5ம் கட்டமாக மோகனூர் ரோட்டில் லத்துவாடியில் இருந்து, பரமத்தி ரோட்டில் தொட்டிப்பட்டி அருகே மதுரை தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கும் பணி யும் நடைபெற வேண்டியுள் ளது. விரைவில் டெண்டர் கோரப்பட்டு பணிகள் துவங்கும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்வில் ஒன்றிய கழக செயலாளர் வி.கே.பழனிவேல், நகர செயலாளர்கள் ராணா ஆனந்த், சிவக்குமார், மாவட்ட சார்பு அணி அமைப்பாளர் கிருபாகரன், துணை அமைப்பாளர்கள் இளம்பரிதி, காந்தி, ஒன்றிய பொருளாளர் கணேசன், ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர் அகிலாண்டேஸ்வரி, கிளைக் கழகச் செயலாளர்கள், வார்டு செயலாளர், பிரதிநிதிகள் மற்றும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



