Homeபிற செய்திகள்நாமக்கல் காங்கிரஸ் சார்பில் ரூ.2 லட்சம் மதிப்பிலான முட்டைகள் வயநாடுக்கு அனுப்பி வைக்கப்பட்டது

நாமக்கல் காங்கிரஸ் சார்பில் ரூ.2 லட்சம் மதிப்பிலான முட்டைகள் வயநாடுக்கு அனுப்பி வைக்கப்பட்டது

கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் நாமக்கல் மாவட்டத்தில் இருந்து ரூ.2 இலட்சம் மதிப்பிலான ஏற்றுமதி தரம் வாய்ந்த முட்டைகள் வயநாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு டாக்டர் பி.வி.செந்தில் தலைமை வகித்தார். மாநிலங்களவை உறுப்பினரும் நாமக்கல் திமுக மாவட்ட செயலாளருமான கே.ஆர்.என். இராஜேஸ்குமார் எம்பி கொடியசைத்து வாகனத்தை அனுப்பி வைத்தார்.

நிகழ்ச்சியில், நாமக்கல் மாநகராட்சி மேயர் கலாநிதி, நாமக்கல் கொங்கு நாட்டு வேளாளர் சங்க தலைவர் பி.கே. வெங்கடாசலம், துணை மேயர் பூபதி, காங்கிரஸ் கட்சி நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் சித்திக், கால்நடை விஞ்ஞானி டாக்டர் நெல்சன், நகர தலைவர் மோகன், திமுக நகர தெற்கு செயலாளர் ஆனந்த், புதுச்சத்திரம் ஒன்றிய திமுக நல்லுசாமி, நரசிம்மன், பன்னீர் செல்வம், காங்கிரஸ் சாந்திமணி உள்ளிட்ட காங்கிரஸ் மற்றும் திமுக முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img