fbpx
Homeபிற செய்திகள்செய்தியாளர்கள் பயணத்தில் விவசாயிகளுடன் கலந்துரையாடிய நாமக்கல் ஆட்சியர் உமா

செய்தியாளர்கள் பயணத்தில் விவசாயிகளுடன் கலந்துரையாடிய நாமக்கல் ஆட்சியர் உமா

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம், பேளுக்குறிச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில், நுண்ணீர் பாசனம் மற்றும் விதை கிராமங்கள் திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயிர் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளதை செய்தியாளர்களுடன் பார்வையிட்டு விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.

நுண்ணிர் பாசன திட்டத் தின் கீழ், பாசன நீரை திறம் பட பயன்படுத்துவதை வலியுறுத்து வதற்காக, நுண்ணீர் பாசனம் அமைப்பதை ஊக்குவிக்கவும்,
சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100% மானியமும், பெரு விவசாயிகளுக்கு 75% மானியமும் வழங்குவதன் மூலம் நுண்ணீர் பாசன வசதியை அமைக்க விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

ஒரு பயனாளி 5 எக்டர் வரை நிதி உதவி பெற முடியும். ஏற்கனவே பயனடைந்த விவசாயிகள் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் புதுப்பித்து மானியத்தையும் பெறலாம்.

இத்திட்டத்தின் கீழ் நாமக் கல் மாவட்டத்தில் 749 விவசாயிகளுக்கு சுமார் 709 ஹெக்டேர் பரப்பளவிற்கு ரூ.357.14 லட்சம் மதிப்பில் நுண்ணீர் பாசனக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், விதை கிராம திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் 2024-&25 ஆம் ஆண்டில் 3,695 விவசாயிகளுக்கு பல்வேறு வகையான நெல் இரகங்கள் 71,598 கிலோ வழங்கப்பட்டுள்ளன.

சேந்தமங்கலம் வட்டத்தில் 2024&-25 ஆம் ஆண்டில் தற்போது வரை நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ் 68 விவசாயிகளுக்கு சுமார் 57.18 ஹெக்டேர் பரப்பளவிற்கு ரூ.65.48 இலட்சம் மதிப்பில் நுண்ணீர் பாசனக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.

விதை கிராம திட்டத்தின் கீழ் 61 விவசாயிகளுக்கு பல்வேறு வகையான நெல் ரகங்கள் 3,998 கிலோ விநியோகம் செய்யப்பட்டுள்ளன. அதனடிப்படையில் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, சேந்தமங்கலம் வட்டாரம், பேளுக்குறிச்சி சேர்ந்த
விவசாயி காளியண்ணன் விதை கிராம திட்டத்தின் கீழ் 20 கிலோ விதை நெல்லை மானியமாக பெற்று நெற்பயிர் சாகுப்படி செய்யப்பட்டுள்ளதையும், விவசாயி செல்வராஜ் நுண்ணீர் பாசனத்திட்டத்தின் கீழ் 1 ஹெக்டர் பரப்பளவில் ரூ.1.05 லட்சம் மானியத்தில் சொட்டுநீர் பாசனம் அமைத்து மஞ்சள் சாகுபடி செய்துள்ளதையும் பார் வையிட்டு விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.

இந்த ஆய்வுகளில் வேளாண் மை உதவி இயக்குநர் கவிதா உட் பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img