fbpx
Homeபிற செய்திகள்கிருஷ்ணகிரியில் பொது விநியோக அத்தியாவசிய பொருட்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கிருஷ்ணகிரியில் பொது விநியோக அத்தியாவசிய பொருட்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கிருஷ்ணகிரியில் பொது விநியோக திட்டத்திற்காக இருப்பு வைக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்களை மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், கிருஷ்ணகிரி மண்டலக் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் கிருஷ்ணகிரி வட்ட செயல்முறை கிடங்கில் பொது விநியோக திட்டத்திற்காக இருப்பு வைக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திடீர் ஆய்வு மேற்கொண்டு பார்வையிட்டார்.

பொது விநியோக திட்டத்திற்கு இயக்கம் செய்ய இருப்பு வைக்கப்பட்டிருந்த தனியார் அரவை முகவர் ஆலையிலிருந்து வரப்பெற்ற புழுங்கல் அரிசியை (பொது ரகம்) ஆய்வு மேற்கொண்டார்.

இருப்பில் இருந்த 12.000 மெ.டன் அரிசி வணிகத் தரத்துடன் இல்லாத காரணத்தினால் அதனை மீண்டும் சம்மந்தப்பட்ட அரவை முகவர் ஆலைக்கு அனுப்பி வணிகத் தரத்துடன் அரவை செய்து மீண்டும் சமர்ப்பிக்க அறிவுறுத்தினார். மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுரையின்படி தனியார் முகவர் ஆலைக்கு 12.000 மெ.டன் அரிசி திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலு வலர் அ.சாதனைக் குறள், மாவட்ட வழங்கல் அலுவலர் கீதா ராணி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் சக்தி சரள், துணை மேலாளர் (தரக் கட்டுப்பாடு) பாலமுரு கேசன், வட்டாட்சியர் வளர்மதி, வட்ட வழங்கல் அலுவலர் வடிவேல் மற்றும் துறை சார்ந்த அலு வலர்கள் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img