கோவை மாவட்ட முத்தரையர் நலச்சங்கம் சார்பாக 23 ஆண்டுகளாக கல்வி பரிசளிப்பு விழா நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான கல்வி பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் கோவை மாவட்டத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தலா மூன்று பரிசுகள் மற்றும் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.
மேலும் சிறப்பு பரிசாக தமிழகத்திலேயே மூன்றாம் இடம் பெற்ற மாணவன் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு ஒன்றியம் ரோஹிந்துக்கு சிறப்பு பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இதேபோன்று மாநில அளவில் சிறப்பிடம் நம் சமுதாய மாணவர்கள் பெற வேண்டும் என்பதற்காக தேவையான உதவிகளை செய்வதாக திருப்பூர் மாவட்ட முத்தரையர் ஒருங்கிணைப்பு குழு தலைவர் மற்றும் சுவரன் மாறன் கல்வி அறக்கட்டளையை சேர்ந்த தர்மராஜ் தெரிவித்துள்ளார். மேலும் திருப்பூர் மாவட்டத்தில் விரைவில் கல்வி பரிசளிப்பு விழா நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் கல்விக்காக நம் சமுதாய மக்கள் உதவி செய்ய வேண்டும் என்பதும் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது காலம் காலமாக நம் சமுதாய மாணவர்கள் பரம்பரை தொழில் செய்து கொண்டு வந்திருந்த காலம் மாறி இப்பொழுது கல்விக்காக நேரத்தை செலவிடுகிறார்கள் ஆகையால் அவர்களின் கல்வி பயணம் திசை மாறக்கூடாது
ஆகையால் நாம் இயன்ற உதவியை அவர்களுக்கு செய்து அவர்களை மேலும் மேலும் படிப்பில் ஆர்வம் காட்ட வேண்டும் என வழி காட்டுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
முடிவில் முத்தரையர் ஒருங்கிணைப்பு குழு தலைவர் தர்மராஜ் நன்றி தெரிவித்தார்.



