fbpx
Homeபிற செய்திகள்ஈரோடு மாவட்ட ஆட்சியர் எழுதிய புத்தகம் வெளியீடு

ஈரோடு மாவட்ட ஆட்சியர் எழுதிய புத்தகம் வெளியீடு

ஈரோடு மாவட்ட ஆட்சியர் எஸ்.கந்தசாமி எழுதிய “அக நக” வெண்பா கவிதை நூல் வெளியீட்டு விழா புத்தக திருவிழாவில் நடைபெற்றது.

இது அவரது 3வது புத்தகம். ஈரோடு மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் புத்தகத்தை வெளியிட்டார்.

தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குனர் வி.ஜோதி நூலை பெற்றுக் கொண்டார்.

வையத் தமிழ்ச் சங்கம் நிறுவனர் இளங்குமரன், திருச்சி தேசியக் கல்லூரி பேராசிரியர் பத்மினி மாலா, சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார் அறிமுக உரை நிகழ்த்தினர்.

கோரல் பப்ளிஷர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் துரைராஜ் வரவேற்புரை ஆற்றினார்.

படிக்க வேண்டும்

spot_img