fbpx
Homeபிற செய்திகள்கோவை ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் பல்துறைக் கல்வி கண்காட்சி

கோவை ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் பல்துறைக் கல்வி கண்காட்சி

கோவை ஸ்டேன்ஸ் ஆங் கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் பல்துறைக் கல்வி கண்காட்சி நடைபெற்றது. ‘புதுமையை மேம்படுத்துதல்’ என்பதைக் கருவாகக்கொண்டு, அறிவியல், தொழில்நுட்பம், கலை மற்றும் கைவினை, கணிதம், வணிகவியல் மற்றும் கணினி அறிவியல் ஆகிய துறைகளை உள்ளடக்கிய இக்கண்காட்சியை பள்ளியின் முன்னாள் முதல்வர் செலின்வினோதினி தொடங்கி வைத்தார்.

நிகழ்வில் பள்ளி முதல்வர் ஜான்ஸ்டீபன், துணை முதல் வர்கள் முனைவர் வ.திவாகரன் மற்றும் பிரியாசீன், உதவித்தலைமையாசிரியர் மார்டின் லூதர்கிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


படைப்பாக்கப் போட்டி மற்றும் கண்காட்சியில், ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் ஒரு பிரிவாகவும், ஒன்பது முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் ஒரு பிரிவாகவும் கலந்துகொண்டனர்.
பல்வேறு அறிவியல் மாதிரிகள் மற்றும் கலைப்படைப்புகள் ஆகியவை வகுப்பறைகளில் காட் சிப்படுத்தப்பட்டன.

இந்நிகழ்வு இளம் தலைமுறையினரின் சிந்தனைத் திறன் களைப்பறைசாற்றின.
சிறந்த மாதிரிகளைத் தேர்வு செய்திட முன்னாள் ஆசிரியர்கள் மற்றும் மாணாக்கர்களைக் கொண்ட நடுவர் குழு பணியாற்றியது.

பள்ளியானது நூற்றாண்டு விழா ஆண்டினைக் கடக்கும் சூழலில் நடைபெற்ற இந்த படைப்பாக்கக் கண்காட்சி பொற் கிரீடத்தில் மேலுமொரு வைரக்கல் பதித்தாற்போல அமைந்தது. சிறந்த மாதிரிகளை உருவாக்கி வெற்றியை ஈட்ட மாணாக்கர்கள் முயன்றது, அவர்களின் படைப் பாற்றலை மேம்படுத்தும் விதமாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

படிக்க வேண்டும்

spot_img