fbpx
Homeபிற செய்திகள்கோவை கொங்குநாடு கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் கோலாகலம்

கோவை கொங்குநாடு கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் கோலாகலம்

பள்ளி மாணவர்களுக்கான கலை, அறிவியல், இலக்கியம் மற்றும் விளையாட்டுப் போட்டி கள் கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து “IGNITE-2025” என்ற தலைப்பில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் தொடக்கவிழா கல்லூரி வளாகத்தில் உள்ள டாக்டர். மாரப்ப ஜி ஆறுச்சாமி கலையரங்கத்தில் நிகழ்ந்தது. இவ்விழாவில் முதல்வர் டாக்டர் வி. சங்கீதா வரவேற்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து, “எண்ணத் தின் நேர்க்கோடே குறிக்கோள், வாய்ப்பைப் பயன்படுத்தி குறிக் கோளை எட்டி வாழ்வை வளப்படுத்திக் கொள்ள வேண் டும்’’ என்று மாணவர்களை ஊக்கு விக்கும் வகையில் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் செயலர் மற்றும் இயக்குநர் டாக்டர் சி.ஏ. வாசுகி தலைமை உரையாற்றினார்.

அவரைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர் பிரியா செந்தில் “மாணவர்கள் தங்களது தன்னம் பிக்கையையும் தனித்துவத்தையும் மேம்படுத்திக் கொள்ளல் அவசியம், மேலும் தங்களைத் தனித்துவமாக நிலைநிறுத்திக்கொள்ள எடுக் கப்படும் முயற்சியே வெற்றி யின் முதல்படி’’ என்று எடுத்துரைத் தார்.

தொடர்ந்து தமிழ்நாடு அறிவி யல் இயக்கத்தின் பொதுச் செயலாளர் எம்.எஸ்.முகமது பாதுஷா கருத்துரையாற்றினார். இந்நிகழ்வில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கோவை மாவட்டச் செயலாளர் கண்ணப்பன் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாகப் பலர் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்வில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி ஆசிரியர்கள் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பித்தனர்.

தொடக்க விழாவினையடுத்து வினாடிவினா, கட்டுரை, பேச்சு, கவிதை, ஓவியம், ரங்கோலி, தனிப்பாடல், தனி நடனம், குழு நடனம் எனப்பல போட்டிகளும், ஆண், பெண் இருபாலருக்குமான கைப்பந்துப் போட்டியும், மாணவர்களின் அறிவியல் மாதிரிப் படைப்புப் போட்டியும் நடைபெற்றது. இப்போட்டிகள் அனைத்திலும் பள்ளி மாணவர்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்டனர்.
இதில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு ரூ.1 லட்சம் வரையில் ரொக்கப் பரிசும், சான் றிதழ்களும் கோப்பைகளும் வழங்கப்படவுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img