Homeபிற செய்திகள்ஈரோடு ஈஸ்வரன் கோவிலில் 25 முதிய தம்பதிகளுக்கு அரசு சார்பில் மரியாதை அமைச்சர் சு.முத்துசாமி பங்கேற்றார்

ஈரோடு ஈஸ்வரன் கோவிலில் 25 முதிய தம்பதிகளுக்கு அரசு சார்பில் மரியாதை அமைச்சர் சு.முத்துசாமி பங்கேற்றார்

இந்து சமய அறநிலை துறை சார்பில் 70 வயது கடந்த 25 தம்பதியினருக்கு கோட்டை ஈஸ்வரன் கோவிலில் சிறப்பு மரியாதை செய்யப்பட்டது. அமைச்சர் முத்துசாமி இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து தம்பதியினருக்கு பட்டுப்புடவை, வேட்டி, மங்களப் பொருட்கள் வழங்கி கௌரவித்தார். இந்து சமய அறநிலைத் துறை சார்பில் 70 வயது கடந்த தம்பதியினரை கௌரவிக்கும் ஒரு புதிய திட்டத்தை முதலமைச்சர் சில தினங்களுக்கு முன்பு சென்னையில் துவக்கி வைத்தார்.
அமைச்சர் சு.முத்து சாமி கூறியதாவது:

வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன அதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம். பொது மக்களுக்கு போதிய அவகாசம் வழங்கப்பட வேண்டும். முடிந்த அளவிற்கு பதிவை பூர்த்தி செய்து தர நாங்கள் உதவி வருகிறோம். அரசு சார் பில் இவ்வாறு உதவ வேண்டும் என்றால் இது சம்பந்தமாக கலெக்டர் இடம் பேசுகிறேன்.

முதல்வர் வரும் நவம் பர் 25 26 தேதிகளில் ஈரோட்டில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அவர் என்ன திட்டங்களை துவக்கி வைக்கிறார் என்பது குறித்து பின்னர் அறிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
ஈரோடு கலெக்டர் கந்தசாமி எம்.பி.பிரகாஷ் எம்எல்ஏ சந்திரகுமார் திருக்கோயில் வாரிய உறுப்பினர்கள் மற்றும் அறங்காவலர்கள்உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img