மேட்டுப்பாளையம் அருகே ஆலாங்கொம்பு பகுதியில் திமுக அரசின் இரண்டாண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.எம்.டி.கல் யாணசுந்தரம் தலைமையில் நடை பெற்றது.
காரமடை கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் நடத்தபட்ட இந்த சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் திமுக துறைப்பொறுப்பாளரும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
அப்போது கூட்டத்தில் ஆ.ராசா பேசுகையில், மெரீனாவில் கலைஞர் கருணாநிதிக்கு கடலில் பேனா நினைவு சின்னம் அமைக்க சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறித்து பேசினார்.
அப்போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இதற்கு எதிர்ப்பு தெ வித்து வருவது குறித்து பேசிய அவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு இது குறித்து பேச எந்த அருகதையும் இல்லை என்றார்.
ஜெயலலிதா போல் நீதிமன்றத்தில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டவர் அல்ல கருணாநிதி. அவருடைய ஒற்றை கையெழுத்தில் பல சட்டங்கள் வந்ததை குறிபிட்ட ராசா எடப்பாடி பழனிச்சாமியின் கடந்த காலங்களில் கொங்கு வேளாளர் சமுதாயம் நிலம் படைத்தவர்களாகவும், பணம் படைத்தவர்களாக இருந் தாலும் அவர்களுக்கு கல்வி அறிவு என்பது இல்லை.
எனவே எங்களை பிற்படுத்தப் பட்ட பிரிவில் சேருங்கள் என அந்த சமுதாயத்தை சேர்ந்த கோவை செழியன் மற்றும் அந்த மக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்ற கலைஞர் கருணாநிதி பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் கொங்கு வேளாளர் சமுதாயத்தை சேர்த்தார்.
அதனால் தான் இன்று அந்த சமுதாயத்தில் ,ஐ.ஏ.ஏஸ்,ஐ.பி.எஸ்,மருத்துவர் , மற்றும் இதர அரசு பணியில் அதிகாரம் படைத்தவர்களாக உள் ளனர். ஏன் கலைஞரின் கையெ ழுத்தில் தான் அண்ணாமலை ஜ.பி.எஸ். இல்லை எனில் ஆடு மேய்க்க தான் போயிருக்க வேண்டும் என்பதை எடப்பாடி மறந்து விட கூடாது என பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட செயலாளர் ரவி,நீலகிரி தொகுதி தேர்தல் பொறுப்பாளர் தர்மலிங்கம், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் பா.அருண்குமார், முன்னாள் மாவட்ட செயலாளர் சி.ஆர்.ராமசந்திரன்,தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.சண் முகசுந்தரம், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் அஷ்ரப் அலி,கோவை மாவட்ட இந்து அறநிலையத்துறை உறுப்பினர் கவிதா கல்யாணசுந்தரம், சிறுமுகை நகர செயலாளர் உதயகுமார், மேட்டுப்பாளையம் நகர செயலாளர்கள் முகமது யூனுஸ், முனுசாமி,ஆலயம் பாலு, அண்ணா துரை உட்பட கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.



