மேகாலயா மாநிலம், ஷில்லாங்கில் உள்ள வடகிழக்கு ஆயுர்வேதா மற்றும் ஹோமி யோபதி இன்ஸ்டிடியூட்டில் (என்.இ.ஐ.ஏ.ஹெச்.), ரூ.60.16 கோடி மதிப்பில் கட்டப்பட்ட 6 புதிய கட்டடங்களை, மத்திய அரசின் கப்பல், நீர்வழி, ஆயுஷ் துறை அமைச்சர் சர்வானந்த சோனோவால் திறந்து வைத்தார்.
இதன் மூலம் ஆண்கள், பெண்கள் விடுதிகள், குடியிருப் புகள், விருந்தினர் இல்லம் போன்றவை பயன்பாட்டுக்கு வந்துள்ளன. நிகழ்ச்சியில் அமைச்சர் சர்வானந்த சோனோவால் பேசுகையில், வடகிழக்கு பிராந்தியத்தின் இயற்கை மருத்துவ முறையை முன்னெடுப்பதன் மூலம், மக்கள் தரமான, மேம்பட்ட வாழ்க்கை வாழ முடியும்.
பிரதமர் மோடியின் தொலைநோக்கு சிந்தனை அனைவருக்கும் சிறப் பான மற்றும் திறமையான மருத்துவ பாதுகாப்பை உரு வாக்க வேண்டும் என்பதே. என்.இ.ஐ.ஏ.ஹெச். இந்த நோக்கத்தை பூர்த்தி செய்ய முக்கிய பங்கு வகிக்கும் என் றார்.
இந்நிகழ்ச்சியில், மேகாலயா மாநில அரசின் சுகாதார துறை அமைச்சர் மஜேல் அம்பரீன் லிங்க்டோ, கால்நடை துறை அமைச்சர் அல் ஹெக், வடகிழக்கு மலைப்பகுதி பல்கலைக்கழக துணைவேந்தர் பிரபா சங்கர் சுக்லா, என்.இ. ஐ.ஏ.ஹெச். இயக்குநர் நீடா மகாசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



