Homeபிற செய்திகள்காமராஜர் திறந்து வைத்த பவானிசாகர் அணைக்கு இன்று 72-வது பிறந்த நாள்

காமராஜர் திறந்து வைத்த பவானிசாகர் அணைக்கு இன்று 72-வது பிறந்த நாள்

ஈரோடு மாவட்டத்தின் வேளாண்மை மற்றும் குடிநீர் தேவைகளுக்கு முக்கிய ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை கட்டி முடிக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்து 71 ஆண் டுகள் நிறைவடைந்து, இன்று 72-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.


நீலகிரி மாவட்டத்தில் இருந்து கிழக்குப் பகுதியில் பாய்ந்து வரும் பவானி ஆறும், மேற்குப் பகுதியில் இருந்து வரும் மாயாறும் சங்கமிக்கும் பகுதியில் பவானிசாகர் அணை அமைந்துள்ளது. இப்பகுதியில் அணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கை 1850-ஆம் ஆண்டு முதலே இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. எனினும், அப்போது ஆங்கிலேய அரசு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.


இதையடுத்து, 1937-ஆம் ஆண்டு இப்பகுதியில் தடுப் பணை கட்டப்பட்டது. ஆனால், அந்த காலகட்டத்தில் பெய்த கனமழை யால் ஆறுகளில் ஏற்பட்ட வெள் ளப்பெருக்கில் தடுப்பணை அடித்துச் செல்லப்பட்டது. இத னால் அணை கட்டும் முயற்சி தற்காலிகமாக கைவிடப்பட்டது.


1946-ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாகாண சட்டப்பேரவைத் தேர்தலில் ஈரோடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்ட ஈஸ்வரன் போட்டியின்றி தேர்ந் தெடுக்கப்பட்டார். அப்போது சென்னை மாகாண முதல்வ ராகப் பொறுப்பேற்க தங்குதூரி பிரகாசத்துக்கு ஒரு வாக்கு தேவைப்பட்டது.


அந்த நேரத்தில் ஈரோடு தொகுதி கடுமையான வறட்சியை எதிர்கொண்டிருந்தது. மாயாறும் பவானி ஆறும் சங்கமிக்கும் இடத் தில் அணை கட்டி, அங்கிருந்து கால்வாய் மூலம் தண்ணீரைக் கொண்டு வந்தால் ஈரோடு பகுதியின் விவசாயம் செழிக்கும் என ஈஸ்வரன் கருதினார்.


இதையடுத்து, தங்குதூரி பிரகாசத்திடம் ஈரோடு தொகுதி யின் வறட்சியைப் போக்கும் வகையில் மாயாறு- & பவானி ஆறுகள் சங்கமிக்கும் பகுதியில் அணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஈஸ்வரன் முன்வைத்தார். அதற்கு பிரகாசமும் ஒப்புதல் அளித்தார். பின்னர் முதல்வ ராகப் பொறுப்பேற்ற அவர், சட்டப்பேரவையில் முன்வைக்கப் பட்ட கோரிக்கையைத் தொடர்ந்து அணைத் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தார். 1947-ஆம் ஆண்டு கீழ்பவானி அணைத் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, 1948-ஆம் ஆண்டு கட்டுமானப் பணி கள் தொடங்கின. அணை, கால் வாய்கள் அமைத்தல், நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளுக்காக அரசு ரூ.10.34 கோடி ஒதுக்கியது.


தொடர்ந்து நடைபெற்ற கட்டு மானப் பணிகள் நிறைவடைந்த நிலையில், அப்போது சென்னை மாகாண முதல்வராக இருந்த காமராஜர் 1955-ஆம் ஆண்டு அணையை பொதுமக்கள் பயன் பாட்டுக்குத் திறந்து வைத்தார்.
அணைத் திட்டம் தொடங்கப்பட்டு நிறைவடையும் காலகட்டத்தில் சென்னை மாகா ணத்தில் 5 முதல்வர்கள் பதவி வகித்தனர். தங்குதூரி பிரகாசம் (1946-47), ஓமந்தூர் ராமசாமி (1947-49), குமாரசாமி ராஜா (1949-52), ராஜகோபாலாச்சாரியார் (1952-54), காமராஜர் (1954-63) ஆகியோர் முதல்வர்களாக இருந் தனர்.

படிக்க வேண்டும்

spot_img