fbpx
Homeபிற செய்திகள்பனை மரங்களை வெட்டுவதற்கு தடை விதித்து விரைவில் அரசாணை- நலவாரியத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் பேட்டி

பனை மரங்களை வெட்டுவதற்கு தடை விதித்து விரைவில் அரசாணை- நலவாரியத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் பேட்டி

தமிழகத்தில் பனை மரங்களை வெட்டுவதற்கு தடை விதித்து விரைவில் அரசாணை வெளிவரும் என்று நல வாரியத் தின் தலைவர் எர்ணாவூர் நாரா யணன் தர்மபுரியில் கூறினார்.

தமிழ்நாடு பனைமர தொழிலாளர்கள் நல வாரியத்தின் ஆய்வுக்கூட்டம் தர்மபுரி சுற்றுலா மாளிகையில் நேற்று நடை பெற்றது. கூட்டத்திற்கு தமிழ்நாடு பனை மர தொழிலாளர்கள் நல வாரியத்தின் தலைவரும், சமத்துவ மக்கள் கழக நிறுவன தலைவருமான எர்ணாவூர் நாராயணன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர் துணை ஆணை யர்கள், அதிகாரி கள் மற்றும் பனை மர தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் மூன்று மாவட்டங்களில் பனை மர தொழிலாளர்கள் முன்னேற்றம் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்துக்கு பின் பனை மர தொழிலாளர்களுக்கு நலவாரிய உறுப்பினருக்கான விண்ணப்ப படிவங்களை தமிழ்நாடு பனை மர தொழிலாளர்கள் நல வாரியத்தின் தலைவர் எர்ணாவூர் நாராயணன் வழங்கினார். பின் னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:- தமிழ்நாடு பனை மர தொழிலாளர்கள் நல வாரியத் தலைவராக பொறுப்பேற்று ஒராண்டு காலம் நெருங்கி கொண்டிருக்கிறது. இந்த வாரி யத் தலைவர் பொறுப்பை கொடுத்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக பனை மர தொழிலாளர்கள் நல வாரியம் முடக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த நல வாரியம் புத்துயிர் பெற்று வருகிறது. நான் 40 தொகுதிகளில் பனை மர தொழிலாளர்களை நேரில் சந்தித்து வாரியத்தில் இணைத்து வருகிறேன்.

கிருஷ்ணகிரி, தர்ம புரி மாவட்டத்திலும் பனை தொழிலாளர்கள் அதிகமாக உள்ளனர். இவர்களையும் நேரில் சந்தித்து ஆய்வு செய்து வாரியத்தில் சேர்த்து, அரசு வழங்கும் நலத்திட்ட உத விகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நான் பொறுப் பேற்றபோது 9 ஆயிரம் தொழிலாளர்கள் உறுப்பினர்களாக இருந்தனர். தற்போது நான் 20 ஆயிரம் பனை மர தொழிலாளர்கள் உறுப்பினர் களாக சேர்த்துள்ளோம். இந்த வாரியத்தின் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.49 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

ஈரோடு, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நலவாரிய உறுப்பினர்கள் சேர்க்கப் பட்டு வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உறுப் பினராக இருந்த நலிவடைந்த பனைத் தொழிலாளர்களுக்கு அரசிடம் நிவாரணம் பெற்று வழங்கப்படுகிறது.

பனைத் தொழிலாளர்ளுக்கு பதனீர் இறக்க அதிகாரம் இருக் கிறது. கருப்பட்டி தயாரிக்கவும், நுங்கு வெட்டி விற்பதற்கும் அதிகாரம் உள்ளது. கள் விற்பனை என்பது அரசின் கொள்கை முடிவு.

அதில் வாரியம் தலையிட முடியாது. தமிழக சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் பனை மரத்தை வெட்டக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அப்படி பனை மரம் வெட்ட வேண்டும் என்றால் கலெக்டர் அனுமதி இல்லாமல் வெட்டக்கூடாது.

ராமநாதபுரத்தில் 1000 பனை மரம் வெட்டப்பட்டது. இது தொடர்பாக நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தமிழக முதல்வர் பனை மரத் தை வெட்டக்கூடா து என கூறியுள்ளார். தமிழகத்தில் பனை மரங்களை வெட்டுவதற்கு தடை விதித்து அரசாணையாக விரைவில் வரும். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது கட்சியின் மாநில பொருளாளர் வக்கீல் கண்ணன், தொழிற்சங்க செயலாளர் டேவிட் ஜெபராஜ், தர்மபுரி மாவட்ட செயலாளர் சங்கர், இளைஞர் அணி செயலாளர் கார்த்திகேயன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img