Homeபிற செய்திகள்குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுக்க பாதுகாப்புக்குழு ஆலோசனை

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுக்க பாதுகாப்புக்குழு ஆலோசனை

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் வந்தனா கார்க் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங் கில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் மூலம் நடத்தப் பட்ட மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது.


இதில் மாவட்டத்தில் உள்ள குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களான குழந்தை திருமணம், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு முறை, பிச்சை எடுத்தல், இளம் வயதில் கருத்தரித்தல், சட்டத்துக்கு புறம்பாக தத்தெடுத்தல் ஆகியவற்றைத் தடுப்பது குறித்து பிற துறை அலுவலர்களுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டது.


இக்கூட்டத்தில் மேற்கூறிய குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறாமல் பார்த்துக்கொள்ள அனைத்து துறை அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் இதனை மீறுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.


அதோடு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, நகர் பகுதி வார்டுகள், வட்டாரங்கள், கிராமங்கள் அளவில் குழந்தைகள் பாதுகாப்பு குழு உருவாக்கப்பட்டு மூன்று மாதத்திற்கு ஒருமுறை குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடத்தி குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்து அதன் அறிக்கையினை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் மூலம் மாவட்ட ஆட்சியருக்கு சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இறுதியாக கூட்டத்தின் தீர்மானத்தினை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வாசிக்க மாவட்ட ஆட்சித்தலைவர் முன்னிலையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img