தூத்துக்குடி சுந்தர வேல்புரத்தில், ஜே.எஸ்.டபிள்யூ எனர்ஜி லிமிடெட் சார்பில் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி கட்டிடத்தை திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மேலும், 27 லட்சத்தில் 80 கல்லூரி மாணவ – மாணவிகளுக்குக் கல்வி ஊக்கத் தொகையை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலம் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மதுபாலன், ஜே.எஸ்.டபிள்யூ துணைத் தலைவர் தென்னவன், தூத்துக்குடி திமுக மாநகர செயலாளர் அனந்த சேகரன், தூத்துக்குடி மாநகராட்சி 4வது வார்டு கவுன்சிலர் நாகேஸ்வரி, குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ரூபி பெர்னாண்டஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.