மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் நாள்தோறும் சுமார் 1,500 முதல் 2,000 பேர் வரை சிகிச்சை பெற வந்து செல்கின்றனர். மேலும், பிரசவம், விபத்து உள் ளிட்ட பிறர் என சுமார் 150 முதல் 200 பேர் வரை தங்கி சிகிச்சை பெறுகின்றனர்.
இந்நிலையில், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோருடன் உடனிருந்து உதவிடும் உறவினர்கள் மருத்துவம னையில் தங்க போதிய வசதி இல்லாமல் இருந்த து. இதனையடுத்து, மேட்டுப்பாளையம் நக ராட்சி தேசிய நகர்ப்புற வாழ்வாதார குழுமம் அரசு மருத்துவமனை வளாகத் தில் அக மற்றும் புற நோயாகளின் உடன் இருப்போர் தங்கும் விடுதி ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டது.
புதிதாக கட்டி முடிக் கப்பட்ட இந்த தங்கும் விடுதியினை மக்கள் பயன் பாட்டிற்காக கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி இன்று ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.
இந்த தங்கும் விடுதியில் 20 ஆண்கள் மற்றும் 20 பெண்கள் தங்கும் வகையில் அறை கட்டப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை இணை இயக்குநர் ராஜசேகர், மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் வாசுதேவன், மேட்டுப்பாளையம் நகர மன்ற தலைவர் மெஹரீபா பர்வீன் நகராட்சி கமிஷனர் அமுதா, அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் கார்த்திக் மஹராஜா மற்றும் மருத்துவர்கள், உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உட்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.