சுதந்திர தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவர்கள் இணைந்து கலாம் பசுமை குழு என்ற அமைப்பின் மூலம் 150 மரக்கன்றுகளை கோவை, சர்க்கார் சாமக் குளம் என்ற பேரூராட்சியில் நடவு செய்தனர். கல்லூரி மாணவர்களால் உருவான கலாம் பசுமை குழு என்ற அமைப்பில் மாணவ, மாணவிகள் ரா.தமிழ்ச் செல்வன், ப.சி.ஜெய்பிரகாஷம், கு. ஸ்ரீவித்யா, மு.சுபவர்ஷினி ஆகியோர் தலைமையில் இந்த நற்பணி மேற்கொள்ளப் பட்டது. இந்த அமைப்பு யாருடைய உதவியும் இன்றி முழுக்க முழுக்க கல்லூரி மாணவர்களால் தொடங்கப் பட்டு செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.