fbpx
Homeபிற செய்திகள்‘மோட்டோ இ13’ ஸ்மார்ட்ஃபோன் ரூ. 8,999- க்கு அறிமுகம்

‘மோட்டோ இ13’ ஸ்மார்ட்ஃபோன் ரூ. 8,999- க்கு அறிமுகம்

இந்தியாவின் முன்னணி ஸ்மார்ட்ஃ பிராண்டான மோட்டோரோலா, அதன் e-series தயாரிப்பு வரிசையின் விரிவாக்கத்தை 8GB RAM மற்றும் ஒரு விசாலமான 128GB ஸ்டோரேஜ் உடன் கூடிய புதிய வேரியண்ட் moto e13 மூலம் நிறைவேற்றப்படுவதை அறிவித்துள்ளது.

இந்த சமீபத்திய சேர்க்கை, அதன் ஈடு இணையற்ற செயல்திறன், அசரவைக்கும் வடிவமைப்பு ஆகியவற்றின் மூலம் ரூ.8,999 விலையில் இந்தபிரிவில் ஒரு மாபெரும் புரட்சியை நிகழ்த்தப்போவதை உறுதிப்படுத்துகிறது .

இணையற்ற அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் தடையற்ற செயல்திறன்களை ஒருங்கிணைத்து, moto e13 அதன் மேன்மைக்கு சிறந்த எடுத்துக் காட்டாக விளங்குகிறது.

இந்த அனைத்தையும் உள்ளடக்கிய UNISOC T606 octa-core பிராசசரால் இயக்கப்படும் ஸ்மார்ட்போன் முன்னெப்போதுமில்லாத வகையில் ‘ஹட்கே’ அனுபவத்தை வழங்க உத்தரவாதம் அளிக்கிறது.

179.5 கிராம் எடை, மிக மெல்லிய 8.47 மிமீ பக்கத் தோற்றம். மிகப்பெரிய 5000mAh பேட்டரி கொண்டது. இந்தப் பிரிவுகளிலேயே முதல் முதலாக அமையப் பெற்றிருக்கும் IP52 நீர்-புகா வடிவமைப்பு காரணமாக உங்கள் பயணத்தின் போது சிந்திச் சிதறும் எந்த ஒரு திரவமும் சாதனத்தை பாழ்படுத்திவிடக்கூடும் என்று கவலைப்படவேண்டியதில்லை.

புதிய மோட்டோ moto e13 வேரியண்ட் ரூ.8,999க்கு Flipkart, முன்னணி சில்லறை விற்பனை கடைகள் மற்றும் Motorola.in இல் கிடைக்கும். 2GB/ 4GB RAM, with 64GB ஸ்டோரேஜுடன் இதற்கு முன்பாக அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன் வேரியண்டும் கிடைக்கிறது.

படிக்க வேண்டும்

spot_img