Homeபிற செய்திகள்சுதா மருத்துவமனையில் நவீன லாரிங்காலஜி கிளினிக் தொடக்கம்

சுதா மருத்துவமனையில் நவீன லாரிங்காலஜி கிளினிக் தொடக்கம்

ஈரோடு சுதா மல்டி ஸ்பெஷா லிட்டி மருத்துவ மனையில் மேம் படுத்தப்பட்ட நவீன லாரிங்காலஜி கிளினிக் தொ டக்க விழா நடை பெற்றது. மருத்துவமனைகளின் நிர்வாக இயக்குநர் டாக்டர் சுதாகர் தலைமை வகித்தார். ஈரோடு பைரவர் பீடம் ஸ்ரீ விஜய் சுவாமிஜி குத்துவிளக்கேற்றி கிளினிக் கைத் தொடங்கி வைத்தார்.

முதன்மை சிறப்பு அழைப்பாளராக பிவிபி பள்ளி மற்றும் சிஎஸ் அகாடமி தாளாளரும், காது, மூக்கு, தொண்டை நிபுணருமான டாக்டர் ராமகிருஷ்ணன் பங்கேற் றார். வேளாளர் எஜு கேஷனல் டிரஸ்ட் தாளாளர் சந்திரசேகர், முன்னாள் எம்எல்ஏ பழனிச்சாமி ஆகியோரும் கலந்து கொண்டனர். விழாவையொட்டி நடைபெற்ற மருத்துவக் கருத்தரங்கில் வேலூர் சிஎம்சி மருத்துவமனை இஎன்டி துறைத் தலைவரும் பேராசிரியருமான டாக்டர் சுமா சூசன் மேத்யூஸ், நவீன லாரிங்காலஜி குறித்து பேசினார். சுதா மருத்துவமனை லாரிங் காலஜிஸ்டும், தமிழகத் தின் முதல் பயிற்சி பெற்ற குரல்வளை மற்றும் தொண்டை அறுவை சிகிச்சை நிபுணரு மான டாக்டர் எம்.பி. கவின் குமார், மேம்ப டுத்தப்பட்ட குரல் மற்றும் விழுங்குதல் மையத்தின் அவசியம் குறித்து விளக்கினார். ஏராளமான மருத்துவர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img