fbpx
Homeபிற செய்திகள்மார்பகப் புற்றுநோய் கண்டறிய நடமாடும் மேமோகிராம் சேவை துவக்கம்

மார்பகப் புற்றுநோய் கண்டறிய நடமாடும் மேமோகிராம் சேவை துவக்கம்

பெண்களிடம் மார் பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறி யும் நோக்கில் காவேரி மருத்துவமனை, லயன்ஸ் டிஸ்ட்ரிக்ட் 3241 சி மற்றும் லயன்ஸ் கிளப் ஆஃப் சென்னை கே.வி.ஜி அறக் கட்டளை இணைந்து ‘நட மாடும் மேமோகிராம்‘ வாக னச் சேவையை துவக்கின.

இந்த மருத்துவ வாக னத்தை தமிழக உணவு மற்றும் நுகர்பொருள் வழங் கல் துறை அமைச்சர் வெங்கட் ரமணன் கொடிய சைத்து துவக்கி வைத்தார்.
குடியிருப்புப் பகுதிகள், பணியிடங்கள், புறநகர் மற்றும் கிராமப்புறங்களுக்கு நேரடியாகச் சென்று மார்பகப் புற்றுநோய் பரி சோதனை மேற்கொள்ளும் வசதி இதில் உள்ளது. மேலும், கர்ப்பப்பை வாய் புற்றுநோயை கண்டறியும் ‘பேப் ஸ்மியர்’, ‘கோல் போஸ்கோபி’ உள்ளிட்ட பரிசோதனைகளும் மேற் கொள்ளப்படும்.
இதில் லயன்ஸ் சர்வதேச அமைப்பின் மாவட்ட ஆளுநர் போஸ், ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சுஜய் சுசிகர் ஆகியோர் பல்வேறு கருத்துக்களை முன் வைத்தனர்.

தொடர்ந்து மருத்துவமனையின் செயல் இயக்குனர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ், “இந்த நடமாடும் மேமோகிராம் வாகனம் மூலம் நோய் தடுப்புப் பராமரிப்பை ஒரு அங்கமாக மாற்ற முடியும்” என்றார்.

படிக்க வேண்டும்

spot_img