Homeபிற செய்திகள்கோவை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம் அணிவித்தார், அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம் அணிவித்தார், அமைச்சர் சம்பத்குமார்

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மதுரை இராஜாஜி மருத்துவமனையில் தாய்மாமன் தங்கமோதிர திட்டத்தை தொடங்கி வைத்ததை தொடர்ந்து, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்வில், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் வே.சம்பத் குமார் கலந்து கொண்டு, பிறந்த குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரத்தை வழங்கினார்.

இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் பவன் குமார் க.கிரியப்பனவர், சூலூர் சட்டமன்ற உறுப் பினர் என்.எம்.சுகுமார், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை கூடுதல் இயக்குநர் (சென்னை) ஜெரார்டு மரிய செல்வம், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.கீதாஞ்சலி, இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு.ஜெயசிங், இணை இயக்குநர் (மருத்துவ நலப்பணிகள்) மரு.சுமதி, மாவட்ட சுகாதார அலுவலர் மரு.பாலுசாமி, மாநகர நல அலுவலர் மரு.சுபாஷ் காந்தி உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில், பிற்படுத் தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் தெரிவித்ததாவது :-
முதலமைச்சர் அவர்கள், ஆட்சிப் பொறுப்பேற்றதும், அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தாய்மாமன் தங்க மோதிரத் திட்டத்தின்கீழ் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என அறிவித்தார்கள்.

அதன்படி, இத்திட்டத் தினை மதுரை ராஜாஜி மருத்துவமனையில் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, அனைத்து மாவட் டங்களிலும் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. கோவை மாவட்டத்தில், அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 22.06.2026 முதல் 26.09.2026 வரை, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 1,713 குழந்தைகளுக்கும், பொள் ளாச்சி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் 599 குழந்தைகளுக்கும், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் 305 குழந்தைகளுக்கும், வால்பாறை அரசு மருத்துவமனையில் 30 குழந்தைகளுக்கும் என மொத்தம் 2,647 குழந்தை களுக்கு தங்க மோதிரங்கள் வழங்கப் படுகிறது.
நேற்றைய தினம் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பொள்ளாச்சி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை, வால்பாறை அரசு மருத்துவமனை என 4 மருத்துவமனைகளிலிருந்து தலா 25 குழந்தைகள் வீதம் மொத்தம் 100 குழந் தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், 5 குழுக்கள் அமைக்கப்பட்டு, அதில் வட்டார மருத்துவ அலுவலர், மருத்துவ அலுவலர், சமுதாய சுகாதார செவிலியர்கள், பகுதி சுகாதார செவிலியர், கிராம & நகர்ப்புற சுகாதார செவிலியர் நியமிக்கப்பட்டு, அவர்கள் மூலம் தினமும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படும்.

கோவை மாவட்டத்தில் 28.09.2026 க்கு பின்னர் அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு, தாய்மார்கள் பிரசவத்திற்குப் பிறகு வீடு திரும்பும் நாளன்று, அந்தந்த அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலேயே தங்க மோதிரங்கள் வழங்கப்படும். இத்திட்டத்தின்கீழ் பயன்பெறும் பயனாளி களுக்கு எனது நல்வாழ்த் துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img