உலக இருதய தினத்தை முன் னிட்டு, ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவ மனை சார்பில் சிபிஆர் விழிப்புணர்வு வாரம் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் தொடங்கியது. நிகழ்ச் சியை மருத்துவமனை நிர்வாக அறங்காவலர் டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமார், தலைமை நிர்வாக அதிகாரி டி. மகேஷ் குமார், மருத்துவ இயக்குனர் டாக்டர் எஸ்.ராஜகோபால், மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் எஸ்.அழகப்பன் உள்ளிட்டோர் பங் கேற்றனர்.


செப்.29 முதல் அக்.4 வரை ரேஸ்கோர்ஸ், விமான நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு சிபிஆர் செய்முறை பயிற்சி மற்றும் விழிப்புணர்வு வழங்கப்பட உள்ளது.
ஃபர்ஸ்ட் ஹார்ட் பவுண்டேஷன் நெட்வொர்க் நிறுவனர் டாக்டர் டி.கே. சரவணன் இணைந்து இம்முயற்சியை ஏற்பாடு செய்துள்ளார்.



