தென்கொரியாவில் உலக சுகாதார அமைப்பு ஆதரவுடன் நடந்த நோயெதிர்ப்புப் புரத உற்பத்திப் பயிற்சியில், பிஎஸ்ஜி கல்லூரி பேராசிரியை டாக்டர் ராஜேஸ்வரி சோமசுந்தரம் சிறப்பு விருது பெற்றார்.
நான்கு வாரங்கள் நடந்த இப்பயிற்சியில் 15 நாடுகளைச் சேர்ந்த 21 விஞ்ஞானிகள் பங்கேற்றனர். இந்தியா சார்பில் பங்கேற்ற ஒரே விஞ்ஞானியான ராஜேஸ்வரி, சிறந்த பங்களிப்புக்காக விருது பெற்றார்.
பயிற்சியில் பெற்ற அறிவை தடுப்பூசி தொழில்நுட்பம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சியில் பயன்படுத்த உள்ளார்.



