வெங்காளூர் கிராமத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. பரமக்குடி கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குனர் டாக்டர் சுந்தரமூர்த்தி தலைமை
வகித்து முகாமை துவக்கி வைத்தார்.
முகாமில் 15 நாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசியும், 196 கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல் தடுப்பூசியும் செலுத்தப்பட்டன.
10 பசுக்களுக்கு செயற்கை முறை கருவூட்டலும், 5 பசுக்களுக்கு சினைப் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டன.
மேலும், மாடுகள், வெள்ளாடுகள், செம்மறி ஆடுகளுக்கு குடற்புழு நீக்க சிகிச்சை அளிக்கப்பட்டது.
கால்நடைகளின் நோய்த் தடுப்பு மற்றும் பராமரிப்பு குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில் 56 கால்நடை வளர்ப்போரின் 850 கால்நடைகள், 196 கோழிகள் என மொத்தம் 1,046 உயிரினங்கள் பயனடைந்தன.



