fbpx
Homeபிற செய்திகள்உலக சர்க்கரை நோய் தின விழிப்புணர்வு வாக்கத்தான்

உலக சர்க்கரை நோய் தின விழிப்புணர்வு வாக்கத்தான்

உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு கோவை, ராம்நகர் நீரிழிவு நோய் சிறப்பு மையம் மருத்துவமனை, கோவை ரோட்டரி சங்க மாவட்டம் 3206 சங்கங்கள், இந்திய மருத்துவ சங்கம், இந்தி யன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவற்றின் சார்பில் ரேஸ்கோர்ஸ் வளாகத்தில் வாக்கத்தான் நிகழ்ச்சி மற்றும் ஜும்பா நிகழ்வு நடைபெற்றது.

இதுகுறித்து கோவை, ராம்நகர் நீரிழிவு நோய் சிறப்பு மையம் மற்றும் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ஆர். பாலமுருகன் கூறியதாவது:

உலகம் முழுவதும் ஆண்டுதோறும் நவம்பர் 14ஆம் தேதி உலக சர்க்கரை நோய் தினம் கடைபிடிக்கப்பட்டு வரு கிறது. அதையொட்டி சர்க்கரை நோய் விழிப்பு ணர்வு வாக்கத்தான் மற் றும் ஜூம்பா நிகழ்வு நடைபெற்றது. இதில் கோவை இந்திய மருத் துவ சங்க கிளையின் மருத்துவர்கள், ரோட்டரி சங்க உறுப்பினர்கள், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள், மருத்துவ மனை செவிலியர்கள், பள்ளி மாணவ மாண வியர்கள் என சுமார் 500 பேர்கலந்து கொண்டனர்.
முன்னதாக நடைபெற்ற நிகழ்வில் ரோட்டரி மாவட்ட ஆளுநர் சஞ்சீவிகுமார், டாக்டர் ரவிக்குமார், மருத்துவர் கார்த்திக் பிரபு, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பொது மேலாளர் வேலாயுதம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img