அந்தியூரில் திமுக மாணவரணி சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான ஒரு நாள் தமிழ்நாடு தேர்வாணையத்தின் கீழ் நடத்தப்படும் தேர்வுகளுக்கான பயிற்சி முகாமை உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் துவக்கி வைத்தார். இதில் வீட்டு வசதி அமைச்சர் முத்துசாமி, அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம், ஈரோடு எம்பி கே.இ.பிரகாஷ், ஈரோடு கிழக்கு எம்எல்ஏ வீ.சி.சந்திரகுமார், மாணவர் அணி மாநில துணை செயலாளர் வீரமணி உட்பட பலர் பங்கேற்றனர்.



