fbpx
Homeபிற செய்திகள்ஐந்தாம் ஆண்டு நினைவு நாள்: கோவையில் க.அன்பழகன் படத்துக்கு திமுகவினர் மலர் தூவி மரியாதை

ஐந்தாம் ஆண்டு நினைவு நாள்: கோவையில் க.அன்பழகன் படத்துக்கு திமுகவினர் மலர் தூவி மரியாதை

வடகோவையிலுள்ள திமுக அலுவ லகத்தில், திராவிட முன்னேற்றக் கழகத் தின் மறைந்த பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகனின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவ ரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில், கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் தலைமை தாங்கி திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் மாநகர் மாவட்ட திமுக நிர்வாகிகள், நாடாளுமன்ற உறுப்பினர், கழக சொத்துப்பாதுகாப்பு குழு துணைத் தலைவர் பொங்கலூர் பழனிச்சாமி, தீர்மான குழு இணை செயலாளர் நாச்சிமுத்து, மூத்த வழக்கறிஞர் கணேஷ்குமார், காந்திபுரம் பகுதி செயலாளர் சேது ராமன், பொது குழு உறுப்பினர்கள் புதூர் மணிகண்டன், இளைஞரணி அமைப் பாளர் தனபால், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் பிரின்ஸ், தலைமைக் கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மண்டலத் தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள், பகுதி மற்றும் வட்டக்கழகச் செயலா ளர்கள், கழகத் தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img