fbpx
Homeபிற செய்திகள்கிக் பாக்ஸிங் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் பாராட்டு

கிக் பாக்ஸிங் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் பாராட்டு

TNPESU சார்பில் மே 2 முதல் 4 வரை மேலக்கோட்டையூரில் மாநில அளவிலான கிக்பாக்சிங் போட்டி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 20 மாவட்டங்கள் கலந்து கொண்டன. ஈரோடு மாவட்டத்தில் இருந்து, ஈரோடு மாவட்ட கிக்பாக்சிங் சங்க பொதுச் செயலாளர் ஏ.யூசுப் தலைமையில் 33 மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் 6 தங்கம், 5 வெள்ளி மற்றும் 9 வெண்கலம் பதக்கங்களை வென்றனர்.

அவர்களை ஈரோட்டில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் வீட்டுவசதித்துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி  பாராட்டினார். சங்க நிர்வாகிகள் ஈரோடு யூசுப், வி.ராஜா, மகேந்திரகுமார், பி.எஸ்.சங்கர், கோபி கே.செங்கோட்டையன், வெள்ளங்கோவில் டி.பரமேஸ்வரன் ஆகியோர் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img