fbpx
Homeபிற செய்திகள்மைண்ட்டாக்ஸ் டெக்னோ இன்டியா 2 வது கிளை கோவையில் துவக்கம்

மைண்ட்டாக்ஸ் டெக்னோ இன்டியா 2 வது கிளை கோவையில் துவக்கம்

கோவையில், மைண்ட்டாக்ஸ் டெக்னோ பிரை வேட் லிமிடெட் நிறுவனம் இந்தியாவில் தனது விரிவாக்க நடவடிக்கையாக இரண்டாவது கிளையை தொடங்குகிறது.

சிங்கப்பூரை தலைமை யிடமாகக் கொண்டு செமிகன்டக்டர் உற்பத்தியில், ஒரு தெளிவான தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டு வருகிறது மைண்ட்டாக்ஸ்.

பொறியியல் துறையில் ஒரு புதிய தொழில்நுட்பத்தையும் நவீனத்தையும் புகுத்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டினை மேற் கொண்டு வருகிறது. அடுத்த தலைமுறைக்கான செமிகன்டக்டர்களை உருவாக்கும் முயற்சியினை மேற்கொண்டு வருகிறது.

இதுகுறித்து மைண்ட் டாகஸ் டெக்னோ சி.இ.ஒ.திருநாவுக்கரசு கூறியதாவது:- கோவை நிறுவனத்தில், பல்வேறு ஆராய்ச்சி மேம்பாடுகளை மேற்கொள்ளவிருக்கிறது. உற்பத்தியையும் மேற்கொள்ளவிருக்கிறது.

கோவையில் உள்ள திறமையான பணியாளர்களுக்கு வேலை வாய்ப்பை அளிப்பதோடு, அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட பணிகளையும் வழங்கும். கோவையின் பொருளாதார வளர்ச்சிக்கு இது உதவும்.

மைண்ட்டாக்ஸ் தொழில்நுட்பம், பங்குதாராக இணைந்து செயலாற்றுவதில் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளது. குறிப்பாக கோவை பகுதியில் உள்ள பல்கலைக் கழகங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வசதிகளுடன் பங்குதாராக மாற திட்டமிட்டுள்ளது.

செமிகன்டக்டர் தொழில்நுட்பத்தில் அறிவுசார் பகிர்வு, புதிய தொழில்நுட்ப ஆராய்ச்சி, மற்றும் கண்டுபிடிப்பில் இணைந்து செயலாற்றுதல் போன்றவைகளையும் மேற்கொள்ளும். மேற்கண்டவாறு அவர் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img