ஓவியக் கலையை ஸ்பானிஷ் மொழியில் பிந்துரா என அழைப்பார் கள். இதனை தலைப்பாக கொண்டு பிந்துரா 2023 என்ற பெயரில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டி திருச்சி ஜோசப் கல்லூரியில் நடைபெற்றது .
விசுவல் கம்யூனிகேஷன் துறை மற்றும் கேம்ப்ளின் நிறுவனம் சார்பில் நடைபெற்ற இப்போட் டியை கல்லூரி முதல்வர் டாக்டர் ஆரோக்கியசாமி சேவியர் துவக்கி வைத்தார்.
தொடக்க விழா நிகழ்ச்சியில் கல்லூரி செயலாளர் அமல், துணை முதல்வர் டாக்டர் ராஜேந்திரன், நோடல் அதிகாரி காணிக்கை ராஜ், விசுவல் கம்யூனிகேஷன் துறை தலைவர் டாக்டர் தமிழரசி, கேம்பலின் நிறுவன மண்டல மேலா ளர்கள் கங்கா பிரசாத், நவநீதகிருஷ்ணன் உட்பட பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
போட்டியில் ஐந்து மற்றும் ஆறாம் வகுப்பு மாணவிகளுக்கு ஒரு தலைப்பும் ஏழு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவ- மாணவியருக்கு ஒரு தலைப்பும் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு ஒரு தலைப்பும் என மூன்று தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.
திருச்சி மாவட்ட அளவில் பதினைந்து பள்ளிகளை சேர்ந்த 350 மாணவ மாணவிகள் இதில் கலந்துகொண்டு தங்களது ஓவியத் திறமையை வெளிக் காட்டினர். முடிவில் பேரா சிரியர் முருகவேல் நன்றி உரையாற்றினார்.



