fbpx
Homeபிற செய்திகள்சிஐஎஸ்சிஇ மண்டல வாலிபால் போட்டி- ஜூட்ஸ் பப்ளிக் பள்ளி மாணவர்கள் அசத்தல்

சிஐஎஸ்சிஇ மண்டல வாலிபால் போட்டி- ஜூட்ஸ் பப்ளிக் பள்ளி மாணவர்கள் அசத்தல்

சி.ஐ.எஸ்.சி.இ. எனும் கவுன்சில் பார் இந்தியன் ஸ்கூல் சர்டிபிகேட் எக்ஸாமினேஷன் பள்ளிகளுக்கான மண்டல அளவிலான வாலிபால் போட்டியில், கோத்தகிரி செயின்ட் ஜூட்ஸ் பப்ளிக் பள்ளி பல பிரிவுகளில் முதல் பரிசை தட்டிச் சென்றது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து 21 பள்ளிகளில் இருந்து 61 அணிகள் பங்கேற்றன. இரண்டு நாட்கள் இந்த போட்டிகள் நடந்தன.

சப்-ஜூனியர் ஆண்கள்: முதல் பரிசு- ஈஷா ஹோம் பள்ளி, 2-ம் இடம் கேஎஸ்ஐஆர்எஸ், கோவை, 3-ம் இடம்-கார்மல் இங்கிலிஷ் பள்ளி, திருச்சி.
பெண்கள் பிரிவில் முதல் பரிசு-ஈஷா ஹோம் ஸ்கூல், 2-ம் இடம்-கேஎஸ்ஆர்எஸ், கோவை, 3-ம் இடம்-செயின்ட் ஜூட்ஸ் பப்ளிக் பள்ளி, (எஸ்ஜேபிஎஸ்) கோத்தகிரி.
ஜூனியர் ஆண்கள்: முதல் பரிசு – எஸ்ஜேபிஎஸ், கோத்தகிரி, 2-வது இடம்-கேபிஎஸ், 3-வது இடம்-ஐசிஎஸ்.

பெண்கள் பிரிவில் முதல் பரிசு-எஸ்ஜேபிஎஸ், கோத்தகிரி, 2-வது இடம் ஐசிஎஸ், 3-வது இடம் டாக்டர் தசரதன்.

சீனியர் ஆண்கள்: முதல் பரிசு-எஸ்ஜேபிஎஸ், கோத்தகிரி, 2-வது இடம்-காமோரின், 3-வது இடம்-ஈஷா ஹோம் ஸ்கூல்.
பெண்கள் பிரிவில் முதல் பரிசு -எஸ்ஜேபிஎஸ், கோத்தகிரி, 2-வது பரிசு-டாக்டர் தசரதன், 3-வது இடம் தீஷா ஏ லைஃப் ஸ்கூல்.

வரும் அக்டோபரில் கோத்தகிரியில் நடைபெற இருக்கும் தேசிய வாலிபால் போட்டிக்கு 6 பரிவுகளில் தகுதி பெறும் அணிகளை குணா, இமானுவேல், ஜெகன்நாதன் ஆகியோர் தேர்வு செய்தனர்.

சிறப்பு விருந்தினர் நீலகிரி மாவட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி கீதா பேசும்போது, தங்களது திறமைகளை வெளிக்காட்ட இப்போட்டிகள் மாணவர்களுக்கு சிறந்த வாய்ப்பாக அமைந்தன என்றார்.

நீலகிரி மாவட்ட தனியார் பள்ளிகளின் மாவட்ட கல்வி அதிகாரி பார்த்தசாரதி பேசும்போது, இது போன்ற போட்டிகள் மாணவர்களுக்கு மனதளவிலும் உடலளவிலும் ஆரோக்கியமான நிலையை உருவாக்கும். வீணாக பல்வேறு அநாவசியமான பொழுதுபோக்குகளில் கவனத்தை சிதறவிடாமல் இருக்க உதவும் என்றார்.

கோத்தகிரி ரிவர்சைட் பப்ளிக் பள்ளி முதல்வர் ஸ்ரீயமுலா ஜெகப்பதோரா, சத்யகார்த்தி முதல்வர் நித்யா நஞ்சுண்டன், கோத்தகிரி இன்டர்நேஷனல் கம்யூனிட்டி பள்ளி முதல்வர் மகேஸ்வரி, கோத்தகிரி பப்ளிக் ஸ்கூல் முதல்வர் பிரேம்பிரைட் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img