தமிழக காவல்துறை தலைவர் டிஜிபி சங்கர் ஜிவால் மண்டலம் வாரியாக போலீசாரிடம் குறைகள் கேட்டு அவை தொடர்பான மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இன்று கோவை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் கோவை மேற்கு மண்டல போலீசார் குறைவிற்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் கலந்து கொண்டு குறைகளை கேட்டறிந்தார். அப்போது அவர் பேசியதாவது:
கோவை மாநகரம், மாவட்டம், திருப்பூர் மாநகரம், மாவட்டம், மற்றும் நீலகிரி, ஈரோடு மாவட்ட காவல்துறையினர் குறைதீர் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் 711 அணுக்கள் பெறப்பட்டுள்ளன.
ஏற்கனவே இடம் மாறுதல் உள்ளிட்ட மனுக்கள் கொடுத்தவர்களின் பெயர்கள் முன்னுரிமை அடிப்படையில் இப்போது மனுக்கள் கொடுக்கும் போலீசாரின் மனுக்கள் சீனியாரிட்டி அடிப்படையில் பரிசீலிக்கப்படும். பொங்கல் பண்டிகைக்கு முன்பாக உங்களது மனுக்கள் மீதான நடவடிக்கை எடுக்கப்படும். அனைவரும் சிறப்பாக பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து போலீசார் மனுக்களை அளித்தனர். அதன் பிறகு பணிகளின் போது குறைபாடு காரணமாக எடுக்கப்பட்ட நடவடிக்கையில் இருந்து பரிசீலனை செய்யும்படி கொடுக்கப்பட்டிருந்த போலீசாரின் மனுக்கள் மீது டி ஜி பி சங்கர் ஜீவால் ஆய்வு செய்து குறைகள் கேட்டார். தொடர்ந்து அவர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் நடந்த நிகழ்வில் பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், கோவை ஐ.ஜி. செந்தில்குமார், டி,ஐ,ஜி, சரவணக்குமார், கோவை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், மற்றும் கோவை மேற்கு மண்டல காவல்துறை அதிகாரிகள், போலீசார் கலந்து கொண்டனர்.