அண்ணா பல்கலைக் கழகம் சார்பில் கல்லூரி களுக்கு இடையேயான மண்டல அளவிலான டேக்வாண்டோ போட்டி கள் திருச்சி தொட்டியம் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் கடந்த ஜன.10 ஆம் தேதி நடந்தது.
இதில் கலந்து கொண்ட கோவை ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மேட்டுப் பாளையம் மாணவன் சஞ்சய் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.
இதன் மூலம் அவர் வரும் மார்ச் மாதம் பஞ்சாபில் நடைபெற உள்ள ஆல் இந்தியா யுனிவர்சிட்டி போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதேபோட்டியில் மேட்டுப் பாளையத்தை சேர்ந்த ஷாராபத் ரோஷன் என்ற மாணவரும் கலந்து கொண்டு வெண்கல பதக்கம் வென்றுள்ளார். இவர் தற்போது கோவை நேரு பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்த மாணவர்கள் இருவரும் தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட மாநில அளவிலான டேக் வாண்டோ போட்டியில் சாதித்து விளையாட்டு ஒதுக்கீட்டில் தனியார் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு பெற்று அதன் மூலம் படித்து வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
டேக்வாண்டா போட்டிகளில் சாதனை படைத்த மாணவர்களை பெற்றோர்கள், கல்லூரி ஆசிரியர்கள், பயிற்சியா ளர்கள், சக மாணவர்கள் பாராட்டி தங்களது வாழ்த் துகளை தெரிவித்துள்ளனர்.



