ஈரோடு வஉசி மைதானத்தில் பள்ளி அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் 350 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
ஈரோடு மாவட்ட தடகள சங்கச் செயலாளர் கோவிந்த ராஜ், முன்னாள் அரசு வழக்கறிஞர் ராஜா, டி.எஸ்.ஆர். இவி மொபிலிட்டியின் செயல்பாட்டுத் தலைவர் பி.மனோகரன், கான்ஃபட் ஆட்டோமோட்டிவ் பிரைவேட் லிமிடெட்டின் நிர்வாக இயக்குநர் ரகுநாத், கான்ஃபட் ஆட்டோ மோட்டிவ் பிரைவேட் லிமிடெட்டின் நிர்வாக இயக்குநர் சுபத்ரா, புகைப் படக் கலைஞர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் செல்வராகவன், நிதி ஆலோசகர் வினோத், ரகுராஜன், சாய் ராஜ் கல்வி அறக்கட்டளையின் வரதராஜன், சமூக சேவகர் மாயா வெங்கடேஷ் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர்.
இப்போட்டிகள் இன்ஸ் பயர் தடகளப் பயிற்சிப் பள்ளி மற்றும் பாரத் யுவ விளையாட்டு கூட்டமைப்பு ஆகியவற்றால் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டன.
இந்த நிகழ்வை பெண்களுக்கான சிறப்பு உடற்பயிற்சியாளரும், இன்ஸ்பயர் விளையாட்டுப் பயிற்சி அகாடமியின் பொருளாளருமான மதுமிதா, தலைமை தடகளப் பயிற்சியாளரும் இயக்கு நருமான சதீஷ்குமார் மற்றும் உடற்கல்வி இயக்குநர், தடகளப் பயிற்சியாளர் மற்றும் பாரத் யுவ விளையாட்டு கூட்டமைப்பின் தலைவர் தேவகாந்தன் ஆகியோர் வழிநடத்தினர்.
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்.எஸ்.ஜி. ஸ்போர்ட்ஸ் அகாடமி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. அதைத் தொடர்ந்து, உடற்கல்வி ஆசிரியர்களான கார்த்திக், நவீனா மற்றும் அய்யந்துரை ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் திருப்பூர் ஃபிரன்ட்லைன் நியூ ஜென் இன்டர்நேஷனல் பள்ளி, கேரட் சீட் பள்ளி மற்றும் இன்ஸ்பயர் தடகள அகாடமி ஆகியவை அடுத் தடுத்த இடங்களைப் பிடித்தன.



