fbpx
Homeபிற செய்திகள்ஈரநிலங்களை காக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமூக மாற்றமாக வேண்டும் திருவண்ணாமலை கலெக்டர் க.தர்ப்பகராஜ் பேச்சு

ஈரநிலங்களை காக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமூக மாற்றமாக வேண்டும் திருவண்ணாமலை கலெக்டர் க.தர்ப்பகராஜ் பேச்சு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ் தலைமையில், திருவண்ணாமலை வனக் கோட்டத்தின் சார்பில் உலக ஈரநில தின விழா நேற்று (3ம் தேதி) மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட் டரங்கில் நடைபெற்றது.

உலகளாவிய ஈரநிலங் களை பாதுகாப்பதற்காக, 1971 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 ஆம் தேதி ஈரானின் ராம்சர் நகரில் உலக நாடுகளுக்கிடையே ஒப்பந்தம் உருவாக்கப் பட்டதாகவும், இந்தியா 1982 ஆம் ஆண்டு அந்த ஒப்பந்தத்தில் கையெழுத் திட்டு ஈர நிலங்களை பாதுகாக்க உறுதிமொழி எடுத்துள் ளதாகவும் விழாவில் எடுத்துரைக்கப் பட்டது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப் பகராஜ் பேசியதாவது:

உலகம் மனிதர்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல; இது அனைத்து உயிர்களுக்குமானது. கடலில் எத்தனை மீன்கள் இருந்தாலும் பறவை ஒரே ஒரு மீனை மட்டும் எடுத்துச் செல்கிறது. இயற்கை சமநிலையும் உயிரினப் பன்மையும் பாதுகாக்கப்பட வேண்டும். ஈரநிலங்கள் என்பது பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாக்கவும், இழந்த சூழலை மீண்டும் உருவாக்கவும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

மாணவர்கள் பள்ளி யிலும் வீட்டிலும் குறைந்தது ஒரு செடியையாவது வளர்த்து பராமரிக்க வேண்டும். இதன் மூலம் சிறிய பயோஸ்பியரை உருவாக்க முடியும். அதுவே சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான சிறந்த தொடக்கமாக அமையும்.
மேலும், உயிரினப் பன்மையின் அவசியம் மற்றும் இயற்கை& மனித சமூகத்தின் பரஸ்பர சார்பு குறித்து அனைவரும் விழிப்புணர்வு பெற வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒவ்வொரு மனிதனின் சிந்தனையிலும் செயல்பாட்டிலும் மாற்றம் தேவை. சுற்றுச்சூழல் மற்றும் வனப் பாதுகாப்பு தனிமனிதனில் தொடங்கி சமூக மாற்றமாக உருவாக வேண்டும். உலகின் உயிர்கள் ஒன்றை ஒன்று சார்ந்து இயங்குகின்றன. ஆகவே சுற்றுச்சூழலை பாதுகாத்து நம் சமூகத்தையும் பாதுகாக்க வேண்டும் என்ற உறுதியுடன் ஈரநில தினத்தை கொண்டாட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, திருவண்ணாமலை மாவட்டத்தின் அனைத்து வனச்சரக பகுதிகளிலும் பள்ளி மாணவர்களுக்காக ஓவியம் வரைதல் மற்றும் முழக்கப் போட்டிகள் பல்வேறு பிரிவுகளில் நடத்தப்பட்டன. இதில் தேர்வு செய்யப்பட்ட முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சான்றி தழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் கு.சுதாகர், உதவி வனப் பாதுகாவலர் வினோத்ராஜ் மற்றும் வனத்துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img