மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஏராளமான காட்டு யானை, மான், காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வகை வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
இந்த வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரைத்தேடி அவ்வப்போது ஊருக்குள் நுழைந்து பயிர்களை சேதம் செய்வதோடு, மனிதர்க ளையும் அச்சுறுத்தி வரு கின்றன.
இந்த நிலையில் மேட் டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி, கோத்தகிரி செல்லும் சாலைகளில் அண்மைக்காலமாக காட்டு யானைகளின் நடமாட்டம் என்பது அதிகமாகவே இருந்து வருகிறது.
குறிப்பாக கோத்தகிரி சாலையின் இரு புறமும் அடர்ந்த வனப் பகுதிகளாகும்.
காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீருக்காக வனப்பகுதியின் ஒருபுறமிருந்து மற்றொரு பகுதிக்கு சாலையைக் கடந்து செல்கின்றன. அவ்வாறு சாலையை கடந்து செல்லும் வனவிலங்குகளை வாகன ஓட்டிகள் துன்புறுத்துவதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கோத்தகிரி சாலையில் உலா வந்த குட்டியுடன் கூடிய இரு காட்டு யானை களை அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தின் முகப்பு விளக்குகளை தொடர்ந்து எரிய விட்டபடியே அதனை துன்புறுத்தும் செயலில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இது போன்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவ டிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் கூறுகையில், மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி, கோத்தகிரி செல்லும் சாலைகளில் மற்றும் சாலையோரங் களில் வனவிலங்குகள் நிற்பதைக் கண்டால் உடனடியாக வனத்துறையி னருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
தனியாக யானைகளை விரட்ட முற்படக்கூடாது. அவ்வாறு விரட்ட முயலும் போது மனிதர்களை தாக்கும் அபாயம் உள்ளது. வனப்பகுதியை ஒட்டி யுள்ள சாலைகளில் வாகன ஓட்டிகள் வேகமாக இயக்க கூடாது. வாகனங்களை மிதமான வேகத்தில் இயக்க வேண்டும். வன விலங்குகளை துன்புறுத்தக்கூடாது.
அதன் அருகில் சென்று புகைப்படம் எடுக்க முயல கூடாது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் மீது வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.