fbpx
Homeபிற செய்திகள்ஆராய்ச்சி உதவித்தொகை பெற்ற அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவி சிந்துலட்சுமிக்கு பாராட்டு

ஆராய்ச்சி உதவித்தொகை பெற்ற அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவி சிந்துலட்சுமிக்கு பாராட்டு

தமிழக முதல்வரிடம் ஆராய்ச்சி உதவித்தொகை பெற்ற சிதம்பரம் அண்ணா மலைப் பல்கலைக்கழக மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் உயர் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுடைய ஆராய்ச்சித் திறனை மேம்படுத்த முதல்வரின் ஆராய்ச்சி ஊக்கத்தொகை திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மாதம் ரூ.25,000 ஊக்கத் தொகை பெறுவதற்கான ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

அதில், ஒருவராக அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பி.எச்டி. உளவியல் பயிலும் மாணவி பா. சிந்துலட்சுமிக்கும் ஆணை வழங்கப்பட்டது.

இந்த நிலையில், ஆரா ய்ச்சி உதவித் தொகை பெற்ற மாணவி பா.சிந்துலட்சுமிக்கு துணைவேந்தர் ஆர்.எம்.கதிரேசன், பதிவாளர் ஆர்.சிங்காரவேல் ஆகியோர் பாராட்டுத் தெரிவித்தனர். புல முதல்வர் குலசேகரபெருமாள்பிள்ளை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img