Homeபிற செய்திகள்கோவை கோவில்பாளையம் பகுதியில் கஞ்சா சாக்லேட் பறிமுதல்: ஓடிசா மாநிலத்தை சேர்ந்தவர் கைது

கோவை கோவில்பாளையம் பகுதியில் கஞ்சா சாக்லேட் பறிமுதல்: ஓடிசா மாநிலத்தை சேர்ந்தவர் கைது

கோவை கோவில்பாளையம் பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்பனைக்கு வைத்து இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பெரியநாயக்கன் பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினர் கீரணத்தம் அருகே சென்று சோதனை மேற்கொண்டனர்.

அப்போது கஞ்சா சாக்லேட்யை விற்பனைக்கு வைத்து இருந்த ஓடிசா மாநிலத்தை சேர்ந்த சஞ்சயகுமார் சமல் (40) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து ரூபாய் 1,14,400 மதிப்பு உள்ள சுமார் 34 கிலோ கிராம் கஞ்சா சாக்லேட்டை பறிமுதல் செய்தனர்.

சஞ்சய குமார் கமலை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறை யில் அடைத்தனர்.

படிக்க வேண்டும்

spot_img