fbpx
Homeபிற செய்திகள்மேட்டுப்பாளையம்- கோவை இடையே பயணிகள் தினமும் ரயில் சேவையின் மத்திய அமைச்சர் எல்.முருகன் துவக்கி வைத்தார்

மேட்டுப்பாளையம்- கோவை இடையே பயணிகள் தினமும் ரயில் சேவையின் மத்திய அமைச்சர் எல்.முருகன் துவக்கி வைத்தார்

மேட்டுப்பாளையம்- கோவை இடையே பயணிகள் ரயில் சேவையினை வாரத்தில் ஏழு நாட்களும் இயக்கி தினசரி ரயில் சேவையாக மாற்றப்பட்டுள்ளது. முதல் முறையாக இயங்க துவங்கிய பயணிகள் ரயிலை மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

மேட்டுப்பாளையம் முதல் கோவை வரை இயக்கப்படும் மெமு மின்சார பயணிகள் ரயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு ஐந்து முறையும் கோவையில் இருந்து மேட்டுப்பாளை யத்திற்கு ஐந்து முறையும் இயக்கப்பட்டு வருகிறது.

மேட்டுப்பாளையம் மற்றும் இதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து கோவைக்கு பள்ளி மற்றும் கல்லூரிக்கு கல்வி கற்க சென்று திரும்பும் மாணவ மாணவிகள், பணி, தொழில், வர்த்தகம் என தினசரி இப்பயணிகள் ரயில் சேவையினை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த ரயில் சேவை திங்கள் முதல் சனிக்கிழமை வரை என வாரத்தில் 6 நாட்கள் என ஞாயிற்று கிழமை தவிர இயக்கப்பட்டு வந்தது.
பொது மக்கள் பெரிதும் பயன் தரும் இந்த பயணிகள் ரயில் சேவையினை ஞாயிற்று கிழமையும் இயக்க வேண்டும் என இரு ஆண்டுகளுக்கும் மேலாக பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது..

இந்நிலையில், மற்றோரு நிகழ்ச்சிக்காக மேட்டுப்பாளையம் வந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகனிடமும் இது தொடர்பான கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இதனையடுத்து இக்கோரிக்கை மனுவினை முன்னிருத்தி மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி குமாருக்கு எல்.முருகன் கடிதம் எழுதியதோடு அவரை நேரிலும் சந்தித்து வலியுறுத்தியதாக தெரிகிறது.

மத்திய ரயில்வே துறை அமைச்சர்

இதனையடுத்து மத்திய ரயில்வே துறை அமைச்சர் உத்தரவின் பேரில் இனி மேட்டுப்பாளையம்- கோவை இடையேயான பயணிகள் ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமைகளிலும் நீட்டிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

உத்தரவு பிறபிக்கப்பட்ட முதல் ஞாயிற்று கிழமையான நேற்று துவக்க விழா நிகழ்ச்சியாக மாலை 4.45 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு (ஒரு முறை மட்டும், அடுத்த ஞாயிறு முதல் வழக்கம் போல் இயக்கப்படும்) செல்லும் என அறிவிக்கப்பட்டது.

இதனை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கொடியசைத்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் தினசரி பயணிகள் ரயிலாக மாற்ற உதவிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகனுக்கு பயணிகள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியின் போது சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ்,சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் கவுதம் சீனிவாசன்,கூடுதல் கோட்ட மேலா ளர் சிவலிங்கம்,உட்பட ரயில்வே அதிகாரிகள்,பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img