fbpx
Homeபிற செய்திகள்கோவையில் ஜனவரியில் சிறு தானிய மாநாடு

கோவையில் ஜனவரியில் சிறு தானிய மாநாடு

கோவையில் சிறுதானிய மாநாடு வரும் ஜனவரி 7-ம் தேதி நடைபெறுகிறது.
ஐக்கிய நாடுகள் சபை 2023-ம் ஆண்டைசர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவித்து உள்ளது. சிறுதானிய உற்பத்தியில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது

அதனால்இந்த ஆண்டை சிறுதானிய ஆண்டாக கொண்டாட அரசு அறிவித்துள்ளது.
அதைத் தொடர்ந்து, கோவையில் நிர்மலா கல்லூரியில் வரும் ஜன.7-ம் தேதி சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

மில்லட் நிறுவனம்

இது குறித்து டான் மில்லட் நிறுவனம் நிறுவனர் சுந்தர், நிர்மலா மகளிர் கல்லூரி பேராசிரியர் டாக்டர் கிருஷ்ணவேணி ஆகியோர் கூறியதாவது:
கோவை நிர்மலா மகளிர் கல்லூரியில் நடை பெறும் இந்த சிறு தானிய மாநாடுவரும் ஜன.7-ம் தேதி தொடங்குகிறது.

இதன்தொடக்க விழாவில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, உணவு மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, மாவட்ட ஆட்சியர் சமீரன், உணவு மற்றும் நுகர்வோர் கூட்டுறவு பாதுகாப்புத்துறை அரசு முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் விவசாய பல்கலைக்கழக துணைவேந்தர் கீதா லட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர் என்றனர்.

படிக்க வேண்டும்

spot_img