fbpx
Homeபிற செய்திகள்ஜெயின் சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்

ஜெயின் சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்

மேட்டுப்பாளையம் ஜெயின் சங்கம் மற்றும் கோவை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் 125 வது இலவச கண் சிகிச்சை முகாம் ஜெயின் பவன் அக்ரஹாரம் பகுதியில் மேட்டுப்பாளையம் ஜெயின் சங்க தலைவர் மிட்டாலால் துகார் மற்றும் பவர்லால் சூரனா நவ்ரத்தனமல் சாங்லா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

ஆலோசனைகள்

ஜெயின் பவனில் நடைபெற்ற இந்த முகாமில் கோவை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர் நரேந்திரன் குழுவினர் கண் பரிசோதனை செய்தனர். இதில் கண்புரை, கண்ணில் தசை வளர்ச்சி, மற்றும் கண் கண்ணாடி வழங்குதல் போன்ற ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்த இலவச கண் சிகிச்சை முகாமினை மேட்டுப்பாளையம் ரமேஷ் மார்க்கெட்டிங் நிர்வாகத்தினர் ஒருங்கிணைத்தனர். நிகழ்ச்சியில் விஜய் சங்கலா, ஸ்ரீ பால், சஞ்சய், ஆஷிஷ், ராகேஷ், சுரேஷ், சந்தோஷ், தருண் மற்றும் ஜெயின் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த முகாமில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் இதில் 60 பேருக்கு கண்ணில் புரை இருப்பதால் அவர்களை கோவைஅரவிந்த் மருத்துவ மனைக்கு அழைத்து சென்று இலவசமாக கண் ஆப்ரேசன் செய்யப்பட உள்ளது

படிக்க வேண்டும்

spot_img